சவூதியிலிருந்து திரும்பிய வவுனியா யுவதி வாழைச்சேனை ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்,கல்­குடா நிருபர், வாழைச்­சேனை நிரு­பர்கள்)

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வி­லுள்ள கிரான் பிர­தேச செய­ல­கத்­துக்கு அண்­மை­யி­லுள்ள மகா­வலி கிளை ஆற்­றி­லி­ருந்து வவுனியா யுவதி ஒரு­வரின் சடலம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை மீட்­கப்­பட்­டது.

கிரான் பிர­தேச செய­ல­கத்­துக்குச் செல்லும் வீதியில் கிரான் பிர­தேச செய­ல­கத்­துக்குச் சமீ­ப­மாக மரங்கள் அடர்ந்த பகு­தியில் மகா­வலி கிளை ஆற்றின் கரையில் இரத்தம் தோய்ந்த நிலையில் இந்த யுவ­தியின் சடலம் கிடப்­பது பற்றி பொலி­ஸா­ருக்குத் தகவல் தெரி­விக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து நேற்று மாலை வாழைச்­சேனை நீதிவான் நீதி­மன்ற பதில் நீதி­பதி ஹபீப் றிபானின் முன்­னி­லையில் இச்­ச­டலம் மீட்­கப்­பட்­டது.

வவு­னியா கணே­ச­புரம் மரக்­காரம் பளை வீதியைச் சேர்ந்த குடும்­பத்தில் மூன்­றா­வது பிள்­ளை­யான ராம­லிங்கம் மருதை சுதர்­சினி (33) என்­ப­வரின் சட­லமே இவ்­வாறு மீட்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். இந்த யுவதி சவூதி அரே­பி­யாவில் பணி­யாற்­றி­விட்டு கடந்த சனிக்­கி­ழமை தான் நாடு திரும்­பு­வ­தாக வவு­னி­யா­வி­லுள்ள தனது தாய்க்கும் சகோ­த­ரிக்கும் அறி­வித்­தி­ருந்தார். ஆனால், அவர் தனது வீடு போய்ச் சேர­வில்லை. இந்த நிலை­யி­லேயே மட்­டக்­க­ளப்பு கிரான் மகா­வலி கிளை ஆற்­றி­லி­ருந்து நேற்று அவர் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

இந்த யுவ­தியின் சடலம் காணப்­பட்ட மகா­வலி கிளை ஆற்றின் மறு கரையில் அவ­ரது கைப்­பை­யி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட கடவுச் சீட்டில் அவர் வவு­னி­யாவைச் சேர்ந்­தவர் என்­பது தெரி­ய­வந்­தது. அதை­ய­டுத்து அங்­குள்ள வவு­னியா மரக்­காரம் பளை பிரிவு கிராம சேவை­யாளர் ராகுல் பிரசாத் உடன் வாழைச்­சேனைப் பொலிஸார் தொடர்பு கொண்டு சுதர்­சி­னியின் விவ­ரங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொண்­டனர்.

சடலம் காணப்­பட்ட மகா­வலி கிளை ஆற்றின் சற்றுத் தொலைவின் ஒரு பகு­தியில், சுதர்­சினி அணிந்­தி­ருந்­த­தாக நம்­பப்­படும் கால­ணிகள், காதணி, இரத்தக் கறை படிந்த தலை­முடி ஆகி­ய­னவும் மேலும் சற்றுத் தொலைவில் சுதர்­சி­னியின் சூட்­கேஸும் அவண் அடங்­கிய பெட்­டி­யொன்றும் காணப்­பட்­டன.

சட­லத்தை மீட்டு அதனைப் பார்­வை­யிட்ட பதில் நீதி­பதி ஹபீப் றிபான் . அச்­ச­ட­லத்தை சட்­ட­வைத்­திய அதி­கா­ரியின் உடற் கூறாய்­வுக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்குமாறும். வவுனியாவிலுள்ள உறவினர்களுக்கு அறிவித்து அவர்களை அழைப்பித்து வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் வாழைச்சேனைப் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எஸ். பெரமுனவுக்கு உத்தரவிட்டார்.

(Visited 248 times, 1 visits today)

Post Author: metro