எதிரிசிங்க பிரதர்ஸ் Hybrid Hub மற்றும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் இணைந்து விழிப்புணர்வூட்டும் Hybrid வாகன முகாம்களை முன்னெடுக்க நடவடிக்கை

எதி­ரி­சிங்க பிரதர்ஸ் Hybrid Hub மற்றும் ஸ்ரீ லங்கா இன்­ஷுவரன்ஸ் (SLIC) ஆகி­யன இணைந்து மேலும் Hybrid வாகன முகாம்­களை முன்­னெ­டுக்க முன்­வந்­துள்­ளன. 2017 டிசம்பர் மாதம் கொழும்பு 07, ரேஸ்­கோர்ஸில் முன்­னெ­டுத்­தி­ருந்த அறி­முக நிகழ்வை ஒத்த செயற்­பா­டுகள் இவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இதனைத் தொடர்ந்து நாட்டின் பிர­தான நக­ரங்­களில் மேலும் பல முகாம்­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டுள்­ள­துடன், அடுத்த ஆறு மாத காலப்­ப­கு­தி­யினுள் கொழும்பில் ஒரு முகாமை முன்­னெ­டுக்­கவும் திட்­ட­மிட்­டுள்­ளது.

Hybrid வாகன முகாம்­க­ளி­னூ­டாக, வாகன உரி­மை­யா­ளர்­க­ளுக்கு தமது வாக­னங்­களின் நிலை தொடர்பில் இல­வ­ச­மாக பரி­சோ­த­னை­களை மேற்­கொண்டு, Hybrid வாகன நிபு­ணர்­க­ளி­ட­மி­ருந்து ஆலோ­ச­னை­களை பெற்றுக் கொள்­ளலாம். அத்­துடன் ‘Hybrid- Grade’ தவிர்ப்பு பரா­ம­ரிப்பு பற்­றிய அறி­வு­றுத்­தல்­க­ளையும் பெற்­றுக்­கொள்ள முடியும் என்­ப­துடன், Hybrid- வாக­னங்­களின் வினைத்­தி­றனை மேம்­ப­டுத்திக் கொள்­ளவும், அநா­வ­சி­ய­மான பழு­து­பார்ப்­பு­களை தவிர்த்­துக்­கொள்­ளக்­கூ­டிய குறிப்­பு­க­ளையும் பெற்­றுக்­கொள்­ளலாம்.

இந்த செயற்­பாடு தொடர்பில் எதி­ரி­சிங்க பிரதர்ஸ் Hybrid Hub இணை-­பி­ர­தம செயற்­பாட்டு அதி­காரி சங்க எதி­ரி­சிங்க கருத்துத் தெரி­விக்­கையில், “பாரம்­ப­ரிய பெற்றோல் அல்­லது டீசல் வலுவூட்டப்­பட்ட வாக­னங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் Hybrid வாக­னங்கள் தொழில்­நுட்ப ரீதியில் மாறு­பட்­டவை என்­ப­துடன், பரா­ம­ரிப்பின் போது மாற்று வழி­மு­றையை கையாள வேண்­டி­யுள்­ளது.

Hybrid வாக­னங்கள் தொடர்பில் சேவை­களை வழங்கும் தொழில்நுட்­ப­வி­ய­லாளர் மற்றும் சேவை ஆலோ­ச­கர்கள் வாக­னத்தின் தொழில்­நுட்பம் தொடர்பில் ஆழ­மான அறிவை கொண்­டி­ருக்க வேண்டும் என்­ப­துடன், குறித்த பயிற்­சி­க­ளையும் பெற்­றி­ருக்க வேண்டும்.

எனவே, Hybrid Hub ஐச் சேர்ந்த எமது ஊழி­யர்­க­ளுக்கு, எமது அர்ப்­ப­ணிப்­பான பயிற்சி வச­தி­களை பயன்­ப­டுத்த வாய்ப்­ப­ளிப்­ப­துடன், ஒன்லைன் ஊடாக எமது சிங்­கப்பூர் மற்றும் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த தொழில்­நுட்ப பங்­கா­ளர்­களின் பயிற்­சி­க­ளையும் பெற்­றுக்­கொ­டுக்­கிறோம். Hybrid வாக­னங்கள் பரா­ம­ரிப்பு தொடர்பில் வாகன உரி­மை­யா­ளர்கள் மத்­தியில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த இந்த செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு நாட்டின் முன்­னணி மோட்டார் காப்­பு­றுதி சேவை வழங்­கு­ந­ரான ஸ்ரீ லங்கா இன்­ஷுரன்ஸ் உடன் கைகோர்ப்­ப­தை­யிட்டு பெருமை கொள்­கிறோம்” என்றார்.

டிசம்பர் மாதம் இடம்­பெற்ற Hybrid­ வாகன முகாம் நிகழ்வில், 50க்கும் அதி­க­மான SLIC வாடிக்­கை­யா­ளர்கள் மற்றும் இதர வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தமது hybrid வாக­னங்கள் தொடர்­பான இல­வச சுகா­தார நிலை பரி­சோ­தனை மற்றும் இனங்­காணல் பரி­சோ­தனை வழங்­கப்­பட்­டி­ருந்­த­துடன், அவர்­க­ளுக்கு பரந்­த­ளவு தொழில்­நுட்பம் மற்றும் வாகன பரா­ம­ரிப்பு சிறந்த செயற்­பா­டுகள் தொடர்பில் Hybrid Hub நிபு­ணர்­களால் விழிப்­பு­ணர்­வுகள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

ஸ்ரீ லங்கா இன்­ஷுரன்ஸ் பேச்­சாளர் ஒருவர் கருத்துத் தெரி­விக்­கையில், “இலங்­கையின் Hybrid வாக­னங்கள் சந்தை வளர்ச்­சி­ய­டைந்து வரும் நிலையில், Hybrid வாக­னங்கள் பரா­ம­ரிப்பு தொடர்பில் எமது வாடிக்­கை­யா­ளர்­களின் அடிப்­படை அறிவை மேம்­ப­டுத்­து­வது தொடர்பில் ஸ்ரீ லங்கா இன்­ஷுரன்ஸ் கவனம் செலுத்­தி­யி­ருந்­தது.

Hybrid Hub உடன் இணைந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த Hybrid வாகன முகாம் செயற்­திட்­டத்­துக்கு எமது Motor Plus வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்தும் இதர Hybrid வாகன உரி­மை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்தும் பெரு­ம­ளவு வர­வேற்பு காணப்­பட்­டது.

இந்த வர­வேற்பு மற்றும் 2017 டிசம்பர் மாத முகா­முக்கு சமு­க­ம­ளிக்கத் தவ­றி­ய­வர்­க­ளுக்கு மீண்­டு­மொரு வாய்ப்பை வழங்கும் வகையிலும் மத்திய மாகாணம் அடங்கலாக மேலும் பல முகாம்களை முன்னெடுக்க எண்ணியுள்ளோம். ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் காப்புறுதித்துறையில் முன்னோடி எனும் வகையில், துறைசார் நிபுணத்துவத்தை கொண்ட எம்மைப் போன்ற சிந்தனைகளைக் கொண்ட சரியான பங்காளர் ஒருவருடன் கைகோர்ப்பது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. எதிரிசிங்க பிரதர்ஸ் உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

(Visited 43 times, 1 visits today)

Post Author: metro