ஆடைகள் மீதான உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கல் உதவி தேவைப்படுகிறது!- – கைத்­தொழில் மற்றும், வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன்

உல­க­ளவில் எங்­க­ளது ஆடை­களின் உற்­பத்தி மற்றும் ஏற்­று­மதி உச்ச தரத்தில் உள்­ளது. இத்­து­றை­யா­னது கடந்த ஆண்டில் வர­லாற்­று­மிக்­க­ளவில் மிகப் பெரிய ஏற்­று­மதி வரு­வாயை பெற்றுத் தந்­துள்­ளது. தற்­போது இத்­து­றைக்கு டிஜிட்டல் மய­மாக்கல் உதவி தேவைப்­ப­டு­கின்­றது என கைத்­தொழில் மற்றும், வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார்.

வர்த்­தகம் மற்றும் அபி­வி­ருத்­திக்­கான ஐக்­கிய நாடு­களின் மாநாட்டு சிரேஷ்ட கொள்கை வகுப்­பா­ளர்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த “டிஜிட்டல் வர்த்­தகம் மற்றும் தொழில்­ம­ய­மாக்கல்” தொடர்­பான செய­ல­மர்வை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்றும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

உயர் மட்­ட­ள­வி­லான இரண்டு நாள் கொண்ட செய­ல­மர்வின் ஆரம்ப அமர்வில் வர்த்­தக திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் சோனாலி விஜ­ய­ரட்ன, வர்த்­தகம் மற்றும் அபி­வி­ருத்­திக்­கான ஐக்­கிய நாடு­களின் மாநாட்டு சிரேஷ்ட ஆராய்ச்­சி­யாளர் டாக்டர் ரஷ்மி பாங்கா, உலக வர்த்­தக அமைப்பு ஆய்வு மைய ஆராய்ச்­சி­யாளர் டாக்டர் அபிஜித் தாஸ் மற்றும் தெற்­கா­சியா, ஆசியான் நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சிரேஷ்ட கொள்கை வகுப்­பா­ளர்கள் மற்றும் வர்த்­தக செய­லா­ளர்கள் ஆகியோர் கலந்­து்­கொண்­டனர்.

இவ் ஆரம்ப அமர்வில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்; டிஜிட்­டல்­ம­ய­மாக்கல் தொடர்பில் இலங்கை பல சவால்­களை எதிர்­கொள்­கி­றது. இவை டிஜிட்டல் திறன்­களின் மெது­வான வளர்ச்­சியை கொண்­டி­ருக்­கின்­றது. மற்றும் எமது ஆடைகள் உட்­பட ஏற்­று­மதிப் பிரி­வு­களை வெற்­றி­க­ர­மான டிஜிட்டல் இலக்­காக்க வேண்டும். இலங்­கையின் சர்­வ­தேச வர்த்­தக அபி­வி­ருத்­தியில் தொழில்­து­றை­யும் உற்­பத்­தி­து­றையும் பாரிய பங்­க­ளிப்­பினைச் செய்­கின்­றன.

எமது ஆடை உற்­ப­த்தி துறை­யா­னது பெரிய ஏற்­று­ம­தி­யாகும், உல­க­ளவில் எங்­க­ளது ஆடை­களின் உற்­பத்தி மற்றும் ஏற்­று­மதி உச்ச தரத்தில் உள்­ளது. இத்­து­றை­யா­னது கடந்த ஆண்டில் வர­லாற்­று­மிக்­க­ளவில் மிகப் பெரிய ஏற்­று­மதி வரு­வாயை பெற்றுதந்­துள்­ளது. 2016 ஆம் ஆண்டில் 3சத வீத அதி­க­ரிப்­புடன் 4.8 பில்­லியன் அமெ­ரிக்க டொலரை ஈட்­டித்­தந்­துள்­ளது. இத்­து­றையின் முன்­னேற்­றத்­திற்கு டிஜிட்டல் ஆத­ரவு தேவை. இலங்கை கைத்­தொ­ழில்­து­றையில் முன்­னணி வகிப்­பது ஆடைத்­தொ­ழி­லாகும்.

திறந்த பொரு­ளா­தார கொள்கை அறி­மு­கப்­ப­டுத்­தப்பட்ட பின் ஆடை தொடர்­பாக இலங்கை பிர­தான நாடா­கி­யது. இலங்­கையின் ஆடைகள் தர­மா­ன­ததால் வெளி­நாட்டுச் சந்தை வாய்ப்பு அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. கடந்த தசாப்­தங்­களில் இலங்­கையின் ஆடை­க­ளுக்கு ஐரோப்பா, அமெ­ரிக்கா நாடு­களில் பெரும் கேள்வி காணப்­பட்­டது. 2016 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் (2017) எமது ஆடைகள் வருமானம் அதிகரித்துள்ளது” என்றார்.

(Visited 47 times, 1 visits today)

Post Author: metro