ஆமர் வீதி துப்பாக்கிச் சூட்டில் கணவர் பலி: மனைவி காயம்; காரில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்தோர் கைவரிசை

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு, ஆமர் வீதியில் நேற்று இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ள நிலையில் அவரின் மனைவி படுகாய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அவ­சர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இச்­சம்­பவம் நேற்று முற்­பகல் 10.45 மணி­ய­ளவில் கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட, ஆமர் வீதியில் வர்­த­தக நிலையத் ஒன்­றுக்கு முன்­பாக இடம்­பெற்­றுள்­ளது. மெசெஞ்சர் வீதிக்குள் நுழைந்த சிவப்பு நிறக் காரில் பய­ணித்த தம்­ப­தியர் மீதே மோட்டார் சைக்­கிளில் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்­க­வசம் அணிந்து வந்த அடை­யாளம் தெரி­யாதோர் இந்த துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­விட்டு தப்பிச் சென்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதன்­போது படு­கா­ய­ம­டைந்த தம்­ப­தி­யினர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில் கணவன் உயி­ரி­ழந்­த­தா­கவும் மனைவி தொடர்ந்து அவ­சர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறு­வ­தா­கவும் தேசிய வைத்­தி­ய­சா­லையின் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.

உயி­ரி­ழந்த நபர் தெமட்­ட­கொட, வேலு­வன பகு­தியைச் சேர்ந்த 42 வய­தான இன­ச­முத்து அன்­டனி ராஜ் எனவும் படு­கா­ய­ம­டைந்­தவர் அவ­ரது மனை­வி­யான 38 வய­து­டைய சுரங்­கிகா நில்­மினி எனவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில் சம்­பவம் தொடர்பில் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்­கவின் மேற்­பார்­வையில் கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் லயனல் குண­தி­ல­கவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக கொட்­டாஞ்­சேனை பொலிஸ் நிலைய சிறப்புக் குழுவும், பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிசாந்த சொய்­ஸாவின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சந்­ர­தி­லக மற்றும் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நெவில் சில்­வாவின் கீழ் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் சிறப்புக் குழுவும் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளன.

துப்­பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்­தேக நபர்கள் ஆமர் வீதி சந்­தி­யூ­டாக தப்பிச் சென்­றுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படும் நிலையில், கொலை தொடர்­பி­லான சி.சி.ரி.வி. காணொ­ளி­களும் பொலி­ஸாரால் பெறப்­பட்­டுள்­ளன. அதன்­படி சந்­தேக நபர்­களின் பய­ணப்­பா­தையைக் கண்­ட­றிய சிறப்புக் குழு, நகரின் பல பகு­தி­களில் உள்ள சி.சி.ரி.வி. கண்­கா­ணிப்புக் கமெ­ராக்­களை ஆராயும் நட­வ­டிக்­கை­க­ளையும் ஆரம்­பித்­துள்ள நிலையில் சந்­தேக நபர்­க­ளையும் கொலையின் பின்­னணி குறித்தும் கண்­ட­றிய பல்­கோ­ணங்­களில் விசா­ர­ணைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.

துப்­பாக்கிச் சூடு இடம்­பெறும் போது, கண­வனே காரைச் செலுத்­தி­யுள்­ள­தா­கவும், காரின் வலது புற­மாக காரை மறித்த மோட்டார் சைக்­கிளில் வந்த துப்­பாக்­கி­தா­ரிகள் , 9 மில்லி மீற்றர் ரக துப்­பாக்­கியைப் பயன்­ப­டுத்தி சர­ம­ரி­யாக சுட்டு விட்டு தப்பிச் சென்­றுள்­ள­மையும் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

துப்­பாக்கிச் சூட்­டை­ய­டுத்து கார் கட்­டுப்­பாட்டை இழந்து அருகில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த வாக­னங்­களில் மோதி நின்­றுள்­ள­துடன் அதனைத் தொடர்ந்தே படு­கா­ய­ம­டைந்த கண­வனும் மனை­வியும் அங்­கி­ருந்த மக்­களால் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளனர். சந்­தேக நபர்­களைக் கைது செய்ய விசாரணைகள் தொடர்கின்றன.

(படப்பிடிப்பு : தினித்)

(Visited 62 times, 1 visits today)

Post Author: metro