சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்த மஹிந்த ராஜபக் ஷ

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தன்னை மறந்து நேற்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்தார்.

இந்தச் சம்பவம் ஆளும் கட்சியினர் உட்பட அனைவரினதும் அவதானத்தை ஈர்த்தது. நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பகல் 1 மணிக்கு கூடியது.

இதன்போது வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்க்ஷ சபாபீடத்துக்குள் நுழைந்தார். அவரது ஆசனம் எதிர்க் கட்சித் தலைவர் ஆசனத்துக்கு அருகிலேயே உள்ளது.

அதாவது எதிர்க்கட்சி தலைவர் ஆசன வரிசையின் அடுத்த ஆசன வரிசையின் முதல் ஆசனமாகும். எனினும் சபாபீடத்துக்குள் நுழைந்த மஹிந்த ராஜபக் ஷ தனது ஆசனத்தை மறந்து எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்து நீண்ட நேரம் இருந்தார்.

இந்த சம்பவம் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆளும் கட்சியினரின் அவதானத்தை ஈர்த்தது. கூட்டு எதிர்க்கட்சி யினரும் இந்த விடயத்தை அறியாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்தனர்.

எனினும் பின்னர் படைகள சேவிதர் ஒருவர் வந்து அவருக்கு நினைவூட்டியவுடன் திடீரென எழுந்து சென்று அருகில் உள்ள தனது ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டார்.

அதன்பின்னர் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தலையில் கைவைத்து சிரித்துக் கொண்டிருந்தார்.

(Visited 170 times, 1 visits today)

Post Author: metro