தந்தையை பராமரிப்பதற்காக 3 வருடங்கள் நடிப்பிலிருந்து விலகியிருந்த நடிகை

ஹொலிவூட் நடிகை ஹிலாரி ஸ்வான்க். சுமார் 3 வருட கால இடை­வெ­ளியின் பின்னர் மீண்டும் நடிக்­க­வந்­துள்ளார்.

சுக­வீ­ன­ம­டைந்­தி­ருந்த தனது தந்­தையை பரா­ம­ரிப்­ப­தற்­கா­கவே தான் 3 வரு­ட­காலம் ஹொலி­வூட்­டி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருந்­த­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

1992 ஆம் ஆண்­டி­லி­ருந்து திரைப்­ப­டங்­க­ளிலும் தொலைக்­காட்சித் தொடர்­க­ளிலும் நடித்து வந்­தவர் ஹிலாரி ஸ்வான்க்.

இரு தடவை ஒஸ்கார் விரு­து­க­ளையும் அவர் வென்­றுள்­ளார். எனினும் கடந்த 3 வரு­டங்­க­ளாக அவர் எந்தப் படத்­திலும் நடிக்­க­வில்லை.

இவ்­வாறு ஹொலி­வூட்­டி­லி­ருந்து தான் வில­கி­யி­ருந்­த­மைக்­கான காரணம் குறித்து அவர் கூறு­கையில், தனது தந்­தையை பரா­ம­ரிக்க வேண்­டி­யி­ருந்­ததால் நடிப்­பி­லி­ருந்து வில­கி­யி­ருப்­ப­தற்கு தான் விரும்­பி­ய­தாக தெரி­வித்­துள்ளார்.

தனது தந்தை அண்­மையில் நுரை­யீரல் சத்­தி­ர­சி­கிச்சை செய்துகொண்ட பின்னர் அவர் குணமடைந்து வருவதாகவும் நடிகை ஹிலாரி ஸ்வான்க் தெரிவித்துள்ளார்.

(Visited 180 times, 1 visits today)

Post Author: metro