‘இன்டியானா ஜோன்ஸ் 5 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடம் ஆரம்பிக்கிறார் ஸ்பில்பேர்க்

புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க், ‘இன்டியானா ஜோன்ஸ் திரைப்பட வரிசையின் 5 ஆவது படத்துக்கான படப்பிடிப்பை அடுத்த வருடம் ஆரம்பிக்கவுள்ளார். இப்படத்திலும் சிரேஷ்ட நடிகர் ஹரிசன் போர்ட் நடிக்கிறார்.

‘இன்டியானா ஜோன்ஸ்’ திரைப்படம் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு ‘ரைடர்ஸ் ஒவ் தி லொஸ்ட் ஆர்க்’ எனும் பெயரில் வெளியாகியது.

இறுதியாக 4 ஆவது திரைப்படமான ‘இன்டியானா ஜோன்ஸ் அன்ட் தி கிங்டம் ஒவ் தி கிறிஸ்டல் இஸ்குல் ‘2008ஆம் ஆண்டு வெளியாகியது.

இந்நிலையில் 5 ஆவது படத்துக்கான படப்பிடிப்பை அடுத்த வருடம் ஆரம்பிக்கவுள்ளதாக விருது வழங்கல் விழாவொன்றில் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் தெரிவித்துள்ளார்.
இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை

(Visited 48 times, 1 visits today)

Post Author: metro