நான் இறந்துவிட வேண்டும் என ஹார்வீ வைன்ஸ்டீன் விரும்பியிருப்பார்-நடிகை ரோஸ் மெக்கோவன்

தான் இறந்­து­விட வேண்டும் என திரைப்­பட தயா­ரிப்­பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் விரும்­பி­யி­ருப்பார் என ஹொலிவூட் நடிகை ரோஸ் மெக்­கோவன் கூறி­யுள்ளார்.

ஹொலிவூடின் பிர­பல திரைப்­பட தயா­ரிப்­பா­ள­ரான ஹார்வீ வைன்ஸ்டீன் (65) மீது நூற்­றுக்கும் அதி­க­மான பெண்கள் பாலியல் குற்­றச்­சாட்­டு­களை சுமத்­தி­யுள்­ளனர்.

ஹார்வீ வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக நடிகை ரோஸ் மெக்­கோவன் குற்றம் கூறி­யுள்ளார்.

1997 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவில் நடை­பெற்ற சூடா­னிய திரைப்­பட விழா­வின்­போது இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக சில மாதங்­க­ளுக்கு முன் ரோஸ் மெக்­கோவன் தெரி­வித்­தி­ருந்தார்.

இக்­குற்­றச்­சாட்டை ஹார்வீ வைன்ஸ்டீன் மறுத்து வரு­கிறார்.

இந்­நி­லையில், சஞ்­சி­கை­யொன்­றுக்கு ரோஸ் மெக்­கோவன் (44) அளித்த செவ்­வியில் ‘நான் இறந்­து­விட வேண்டும் என ஹார்வீ வைன்ஸ்டீன் விரும்­பி­யி­ருப்பார்.

அவர் அப்­ப­டி­யா­னவர் அவரை விட மோசமான நபர்கள் அவரின் சட்டத்தரணிகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 130 times, 1 visits today)

Post Author: metro