சிதைக்கப்பட்ட நாணயத்தாள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

சிதைக்கப்பட்ட அல்லது உருமாற்றப்பட்ட நாணயத்தாள்கள் மார்ச் 31ஆம் திகதியின் பின்னர் ஒருவரிடம் இருக்குமாயின் அதனால் ஏற்படக்கூடிய நட்டத்தை நாணயத்தாள் வைத்திருப்பவரே ஏற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய வங்கியின் நாணயத்தாள் பிரிவை சேர்ந்த அதிகாரி தீபா சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

“நாணயத்தாள்கள் வேண்டுமென்றே சிதைக்கப்பட்டு அல்லது உருமாற்றப்பட்டு இருக்குமாயின் என்பதன் பொருள் நாணயத்தாள்களில் எழுத்து இலக்கம் கோடு இடுதல் ஆகியவற்றின் மூலம் நாணயத்தாள்களுக்கு வேண்டுமென்றே பாதிப்பை ஏற்படுத்தலாகும்.

நாணயத்தாள்களின் தொடர் இலக்க கையெழுத்து வெளியிடப்பட்ட திகதி பாதுகாப்பு அடையாளம் (பாதுகாப்பு இலட்சினை) ஆகிய நாணயத்தாள்களில் இருக்கவேண்டிய இலட்சணங்கள் ஆகும்.

வெள்ளம் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களினால் அல்லது நாளாந்த பாவனையின் போது பாதிப்புக்குள்ளாகும் நாணயத்தாள்களை மாற்றி கொள்வதற்கு நிர்ணய திகதி கிடையாது.

இவ்வாறான நாணயத்தாள்களில் 75% சதவீதமான பாதிப்பு இருக்குமாயின் அவ்வாறான நாணயத்தாள்களின் முழுமையான பெறுமதியாக புதிய நாணயத்தாள்கள் வழங்கப்படும்.

50% சதவிதமான பாதிப்பு இருக்குமாயின் குறிப்பிட்ட நாணயத்தாள்களுக்கு அரைவாசி பங்கு பெறுமதிக்கான நாணயத்தாள்கள் வழங்கப்படும்.

முழுமையாக பாதிப்புக்குள்ளான நாணயத்தாள்கள் அதன் உரிமையாளருக்கு வழங்கப்படமாட்டாது. எதிர்ரும் 31 ஆம் திகதியின் பின்னர் வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட அல்லது உருமாற்றப்பட்ட நாணயத்தாள்கள் ஒருவரிடம் இருக்குமாயின் அதனால் ஏற்படக்கூடிய நட்டத்தை நாணயத்தாள் வைத்திருப்பவரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ATM இயந்திரத்தின் மூலம் பணம் பெற்றுக்கொள்ளும் போது அதன் பொறுப்பு வங்கிக்கே உரித்தாகும்

அத்துடன் CDM இயந்திரத்தின் மூலம் பணத்தை வைப்பு செய்யும் அந்த நாணயத்தாளுக்கான பொறுப்பு வைப்பிற்கு செய்பவருக்கே உரித்தாகும்.

அதன் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் வர்த்தக நிதி திணைக்களம் பொது மக்களிடம் கேட்டு கொள்வது என்னவென்றால் நாணயத்தாளின் எழுதுதல் சேதப்படுத்தல் போன்ற பழக்கவழக்கங்களில் இருந்து தவிர்த்து கொள்ளவேண்டும்

நாணயத்தாள்களை பயன்படுத்தும்போது மிகவும் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்று பொதுமக்களிடம் அத்திணைக்களம் கேட்டுகொண்டுள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

(Visited 168 times, 1 visits today)

Post Author: metronews 2