அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தம்

உலகின் தலைச்சிறந்த கோடீஸ்வர் முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானி தனது பள்ளித் தோழியை இந்த ஆண்டில் கரம் பிடிக்கிறார்.

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு கோவாவில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனை உறுதி படுத்தும் வகையில் தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தா என்பவரை திருமணம் செய்துக்கொள்ள உள்ளார்.

இந்த வருடம் இவர்களுடைய திருமணம் நடைபெறும் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து இவர்களுடைய நிச்சயதார்த்தம் கோவாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடைபெற்றுள்ளது.

ஆகாஷ் அம்பானி தற்போது திருமணம் செய்துக்கொள்ள உள்ள ஸ்லோகா மேத்தாவும், இவரும் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஒன்றாக படிக்கும் காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக உள்ளார்.

ஆனால் இவர்களுடைய திருமண திகதி குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

(Visited 164 times, 1 visits today)

Post Author: metronews 2