அமெரிக்க பாடசாலைகளில் நிற பாகுபாட்டை ஒழிக்க காரணமான பெண் மரணம்

அமெரிக்க பாடசாலைகயில் நிறப்பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவரும் வரலாற்று முக்கியம் வாய்ந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு காரணமாக இருந்த லின்டா பிரவுன் தனது 75 ஆவது வயதில் காலமானார்.

ஆபிரிக்க அமெரிக்க சிறுமியான பிரவுனுக்கு 1951இல் வெள்ளையின ஆரம்ப பாடாசலையில் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவரது தந்தை தொடுத்த வழக்கு அமெரிக்க பாடசாலைகளில் நிறப்பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவந்தது.

கென்சாசில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆரம்ப பாடசாலையில் அனுமதி மறுக்கப்பட்ட லின்டா பிரவுன் இரண்டு மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஆபிரிக்க அமெரிக்கர்களின் பாடசாலை ஒன்றுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டார்.

 

அவரது தந்தை ஒலிவர் பிரவுன் கல்வித் திணைக்களத்திற்கு எதிராக தொடுத்த வழக்கிற்கு 1954 இல் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அரச பாடசாலைகளில் நிறப்பாகுபாடு காட்டுவது சட்டவிரோதமென உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகமனதாக தீர்ப்பளித்தனர்.

(Visited 9 times, 1 visits today)

Post Author: metronews 2