அடுத்த வாரிசிற்கு தயாராகின்றது பங்கிங்காம் அரண்மணை

பிரிட்டிஸ் இளவரசர் வில்லியம்ரூபவ் கேட்மிடெல்டன் தம்பதிகளின் மூன்றாவது குழந்தையை
வரவேற்பதற்கு கென்சிங்டன் அரண்மணைதயராகிவருகின்றது.தனது முதல் இரண்டு குழந்தைகளையும் பிரசவித்த சென்மேரிஸ் மருத்துவமனையிலேயே மிடெல்டன் அனுமதிக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

சில வாரங்களிற்கு முன்னர் பிரிட்டனின் சன்செய்தித்தாளின் அரண்மனை விவகாரங்களிற்கு
பொறுப்பான புகைப்படபிடிப்பாளர் குறிப்பிட்ட மருத்துவமனை புதிய வடிவம் பெறும்புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதனைதொடர்ந்து அரண்மனை அடுத்த வாரிசிற்காகஅந்த மருத்துவமனையை தெரிவு செய்துள்ளது என்றஎதிர்பார்ப்புகள் எழுந்தன.இளவரசர் வில்லியம் தம்பதிகளின் இரண்டாவது குழந்தை பிறந்தவேளை மருத்துவர்களாக பணியாற்றிய அதே மருத்துவர்கள் குழு  மருத்துவ பணியில் ஈடுபடவுள்ளது.

புதுவரவை கொண்டாடுவதற்காக குவியவுள்ள மக்களையும் ஊடகவியலாளர்களையும்
கருத்தில்கொண்டு; மருத்துவமனை பாதுகாப்பு எற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இளவரசர் வில்லியம் இந்த மருத்துவமனையிலேயே பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேட் வில்லியம்சின் பிரசவ திகதியை இன்னமும் கென்சிங்டன் அரண்மனை அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது.மேலும் எலிசபெத்மகராணியின் குடும்பத்தின் புதிய வரவு ஆணா பெண்ணா என்பது குறித்த விடயத்தையும் அரண்மனை இன்னமும் கசியவிடவில்லை.

இதேவேளை இளவரசர் வில்லியமும் அவரது மனைவியும் தங்கள் அடுத்த வாரிசு ஆணா பெண்ணா என்பதை அறியவிரும்பவில்லை எனவும் தகவல்கள்
வெளியாகியுள்ளன.

கேட்மிடெல்டன் தனது பிரசவகாலத்தின் ஆரம்பநாட்களில் மோசான உடல்பாதிப்புகளை
எதிர்கொண்டார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன எனினும் அதனையும் மீறி அவர் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

சமீபத்தில் கிழக்கு லண்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் கலந்துகொண்டிருந்தார்.
வில்லியமும் மிடெல்டனும் எலிசபெத் மகாராணியின் பணிச்சுமையை குறைப்பதற்காக
சில மாதங்களிற்கு முன்னர் மீண்டும் லண்டனில் குடியேறியுள்ளனர்.

(Visited 39 times, 1 visits today)

Post Author: metronews 2