பதக்கம் வென்ற பிரபலத்தின் வாரிசு

கோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் மாதவன். இறுதியாக இவர் நடித்து தமிழில் வெளியான இறுதிச் சுற்று மற்றும் விக்ரம் வேதா படங்கள் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்திருந்தது.

இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் பெயர் வேதாந்த் மாதவன். 12 வயதுமிக்க அவர் தாய்லந்தில் நடைபெற்ற சர்வதேச 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக நேற்று ‍செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

 

இதை சமூக வலைத்தளங்களில் மகனது புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் மாதவன். நானும் மனைவி சரிதாவும் பெருமை கொள்ளும் தருணம் இது. மகன் வேதாந்த் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் பதக்கம் வென்றுள்ளார்.

(Visited 32 times, 1 visits today)

Post Author: metronews 2