காவிரி மேலான்மை வாரிய போராட்டத்தில் ஈடுபட்டவர் மின்சாரம் தாக்கி பலி

ரயில் மேல் ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
தமிழ்நாட்டில் காவிரி மேலான்மை வாரியம் தொடர்பாக பா.ம.க வினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையடுத்து பல மாவட்டங்களில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அத்தோடு பேரூந்துகள் பெரும்பாலும் இயங்கவில்லை.

இதையடுத்து 100க்கும் மேற்பட்ட பா.ம.க தொண்டர்கள் இரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டிவனத்திலும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர் இதன் போது பா.ம.க தொண்டர் உருவர் ரயிலின் மீது ஏறி தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

இதன் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச் சம்பவம் போராட்டக்களத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பொலிஸார் அந்த உடலை மீட்டு விசாரனைகளை மேற்கொணடு வருகின்றனர்.

(Visited 23 times, 1 visits today)

Post Author: metronews 2