இளவரசர் ஹாரி திருமணம்: டிரம்ப், தெரசா மேவுக்கு அழைப்பு இல்லை

பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இந்த ஜோடி, கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர்.

இவர்களது திருமணம் மே மாதம் 19 ஆம் திகதி நடைபெற உள்ளது என கென்சிங்டன் அரண்மனை கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அவர்களது திருமணம் விண்ட்சர் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் சேப்பலில் வைத்து நடைபெறும். திருமணத்திற்காக பிரம்மாண்ட வரவேற்பு மற்றும் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இளவரசர் ஹாரி திருமணத்திற்கு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக சம்மதம் தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உள்ளிட்டோருக்கு அழைப்பு இல்லை என அரண்மனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இளவரசர் ஹாரி – மேகன் மார்க்லேயின் திருமணம் மே மாதம் 19 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹாரிக்கு நெருக்கமாக கருதப்படும் பாரக் மற்றும் மிச்செல் ஒபாமா உள்பட பலருக்கு திருமண அழைப்பு அனுப்பப் போவதில்லை என தெரிவித்துள்ளது.

(Visited 150 times, 1 visits today)

Post Author: metronews 2