பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சிகரச் செய்தி..! 

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 354 பாடசாலைகளுக்கு 02 ஏக்கர் வீதம் காணி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மலையக பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக 843 பாடசாலைகள் நிறுவப்பட்டுள்ள போதும், அவற்றுக்கு நிலையான காணிகள் இல்லாத நிலையை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (10.04.2018) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், அரச சுயதொழில் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்  நவீன் திஸாநாயக்க ஆகியோர் முன்வைக்கப்பட்ட கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 58 times, 1 visits today)

Post Author: metronews 1