சென்னையின் வெற்றிக்கு காரணமான கொல்கத்தாவின் வினய் குமாரை டுவிட்டரில் சீண்டிய ரசிகர்கள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவரில் 16 ஓட்டங்களை கொடுத்ததன் மூலம் கொல்கத்தா அணி தோல்வியடைவதற்கு காரணமாக விளங்கிய வேகப்பந்து வினய் குமாரை இரசிகர்கள் டுவி;ட்டரில் சீண்டி வருகின்றனர்.

செவ்வாய்;கிழமை இடம்பெற்ற போட்டியில் இறுதி ஓவரை வீசும் வாய்ப்பை கொல்கத்தா அணியின் தலைவர் தினேஸ்கார்த்திக் வினய்குமாரிற்கு வழங்கினார்.

அந்த இறுதிஓவரில் 16 ஓட்டங்களை பெற்றால் சென்னை அணி வெற்றிபெறலாம் என்ற நிலையில் வினய்குமார் பந்து வீச ஆரம்பித்தார்.

முன்னைய ஓவர்களை சிறப்பாக வீசாத வினய்குமார் முன்னைய போட்டியில் சென்னை அணிக்கு வெற்றிவாய்ப்பை உறுதிசெய்த டரன் பிராவோவிற்கு ரவுண்ட் த விக்கெட் வீசினார்.
வினய்குமார் வீசிய புல்டொஸ் பந்தை பிராவோ சிக்சர் அடித்தார்.பின்னர் பந்தின் உயரம் காரணமாக அதனை நோபோல் என நடுவர்கள் அறிவித்ததால் அந்த பந்தில் சென்னை அணிக்கு ஏழு ஓட்டங்கள் கிடைத்தன.

போட்டி முடிந்த பின்னர் டுவிட்டரில் வினய்குமார் ரசிகர்களின் கேலியை எதிர்கொண்டார். வினய் குமாரை கேலி செய்வதற்காக இரசிகர்கள் காவிரி விவகாரத்தையும் பயன்படுத்தினர். கர்நாடக வீரரான வினய்குமார் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நஸ்டஈடு என இரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.

 

சிலமணிநேரம் பொறுமையாகயிருந்த வினய்குமார் பின்னர் இரசிகர்களை அமைதியாகயிருக்குமாறு மன்றாடாத குறையாக கேட்டுக்கொண்டுள்ளார்.கடந்த காலத்தில் தான் சிறப்பாக பந்து வீசியதை சுட்டிக்காட்டியுள்ள அவர் அப்போதெல்லாம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள் என இரசிகர்களை கேட்டுள்ளார்.

(Visited 27 times, 1 visits today)

Post Author: A Rajeevan