இலங்கை ரூபாய் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று(11.04.2018) வீழ்ச்சிப் போக்கை காட்டியதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நேற்றைய நாள் முடிவின்போது டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதற்கமை டொலர் ஒன்றின் பெறுமதி 155 ரூபா 55 சதமாக பதிவாகியுள்ளது.

எனினும், நேற்று முன்தினம் டொலருக்கான பெறுமதி 10சதம் குறைவாக காணப்பட்டுள்ளது.

புத்தாண்டு காலத்தில் வர்த்தகத்தில் உணரப்பட்ட வீழ்ச்சித் தன்மையே இதற்கான காரணமாகும் என்று கூறப்படுகின்றது.

எவ்வாறிருப்பினும், சில வங்கிகளில் டொலருக்கான கேள்வி நிலவியதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

(Visited 219 times, 1 visits today)

Post Author: metronews 1