மனைவியின் வாயில் பலவந்தமாக விஷத்தை ஊற்றிய கொடூரக் கணவன்..!

இளம் மனைவிக்கு விஷம் கொடுத்ததாக கூறப்படும் கணவர் ஒருவர் கண்டி, ஹுன்னஸ்கிரிய பிரதேசத்திலே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் குமார என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பலவந்தமாக விஷம் கொடுத்த மனைவி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

வேறொரு சிகிச்சைக்கு உடதும்பர வைத்தியசாலையில் இதற்கு முன்னர் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு சென்ற கணவர், மனைவியின் வாயை பலவந்தமாக திறந்து விஷயத்தை ஊற்றியுள்ளார் என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விஷம் ஊற்றியமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

(Visited 109 times, 1 visits today)

Post Author: metronews 1