சென்னையை பிரிந்து செல்வதால் மனமுடைந்து போயுள்ளோம்- சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் கவலை

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ள போட்டிகள் சென்னையிலிருந்து புனேயிற்கு மாற்றப்பட்டுள்ளமை குறித்து சென்னை அணியின் வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அறிவிப்பினால் நாங்கள் மனமுடைந்துபோயுள்ளோம் என சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் டுவிட்டரில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சொந்த மண்ணில் விளையாடுவதற்கான வாய்ப்பையும் சென்னை இரசிகர்களை மகிழ்வி;ப்பதற்கான சந்தர்ப்பத்தையும் நாங்கள் தவறவிடப்போகின்றோம் என தெரிவித்துள்ள சுரேஸ் ரெய்னா நீங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் இருப்பீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அணிக்கும் ரசிகர்களிற்கும் இது கவலையான விடயம் என தெரிவித்துள்ள சேன்வட்சன் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து வெளியேறுவது குறித்தும் மீண்டு;ம் திரும்பி வரமுடியாது என்பது குறிததும் கவலையடைந்துள்ளேன் என பப் டு பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து வெளியேறுவது குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளேன் எனக்கு இங்கு மனநிறைவான வரவேற்பும் எதனையும் எதிர்பார்க்காத அன்பும் கிடைத்தது அடுத்த வருடம் நாங்கள் மீண்டும் விளையாட வரும்போது இந்த பிரச்சினைகளிற்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கின்றேன்- இவ்வாறு இம்ரான் தாகிர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சாம் பில்லிங்ஸ் ஸ்டீபன் பிளெமிங்ஸ் போன்ற வீரர்களும் சென்னையிலிருந்து வெளியேறவேண்டியுள்ளமை குறித்து கவலையும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளனர்.

(Visited 104 times, 1 visits today)

Post Author: A Rajeevan