போராடிதோற்றது CSK : மயிரிழையில் வெற்றது KXIP..!

ஐபிஎல் தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நான்கு ஓட்டங்களினால் மயிரிழையில் வெற்றியை நழுவவிட்டது.

நேற்று(15.04.2018) நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பஞ்சாப் அணிசார்பில் களமிறக்கப்பட்ட கிரிஸ் கெயில் 33 பந்துகளுக்கு 66 ஓட்டங்களையும், கே.எல். ராஹுல் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தாகூர் மற்றும் தாஹீர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

சென்னை அணி சார்பில் டோனி 79 ஓட்டங்களையும், ராயுடு 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 

(Visited 59 times, 1 visits today)

Post Author: metronews 1