நான் பலாத்காரம் அல்லது கொலை செய்யப்படலாம்: கதுவா சிறுமியின் வழக்கறிஞர் பேட்டி

கதுவாவில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி சார்பில் வாதாடும் வழக்கறிஞர் தீபிகாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவாவில் 8 வயது சிறுமி கோவிலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சிறுமி சார்பில் வாதாட தீபிகா எஸ். ரஜாவத் முன்வந்துள்ளார். இந்நிலையில் தீபிகாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தீபிகா கூறியதாவது,

எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். நான் எத்தனை நாள் உயிருடன் இருப்பேன் என்று தெரியவில்லை. என்னை பலாத்காரம் செய்யக்கூடும் அல்லது மானபங்கப்படுத்தக்கூடும். உன்னை மன்னிக்க மாட்டோம் என்று என்னிடம் தெரவித்தனர்.

நான் ஆபத்தில் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளேன் என்றார். சிறுமி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே அவரை திட்டமிட்டு கடத்தி போதைப் பொருள் கொடுத்து இவ்வாறு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 53 times, 1 visits today)

Post Author: A Rajeevan