அம்பலாந்தோட்டை விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட நால்வர் பலி

அம்பலாந்தோட்டை மிரிஜவில சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.முச்சக்கரவண்டியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்திலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஓரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பயணித்த முச்சக்கரவண்டிமுற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனஇந்த விபத்தில் தாய் தந்தை மற்றும் ஒரு வயது எட்டு வயது பிள்ளைகள் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் பலியாகியுள்ளனர் பேருந்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது எனினும் பேருந்தில் இருந்தவர்களிற்கு உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த விபத்தின் பின்னர் பேருந்து சாரதி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்
குறிப்பிட்ட சந்தியில் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து பொதுமக்கள் தொடர்;ச்சியாக தெரிவித்து வந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

(Visited 33 times, 1 visits today)

Post Author: A Rajeevan