இந்தியாவின் மற்றுமொரு நம்பிக்கை நட்சத்திரம்- சஞ்சுசாம்சன்

சஞ்சு சாம்சனின் வயது 23- எனினும் அவர் கடந்த ஐந்து வருடங்களாக இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக விளங்குகின்றார்.

2013 ஏப்பிரலில் தனது 18 வயதில் அவர் ராயஸ்தான் ரோயல் அணியை வெற்றியை நோக்கி கொண்டு செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளான வேளை அதனை மிக அழகாக செய்து முடித்தார்.

தனது முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
அதன் பின்னர் மிகக்குறைந்த வயதில் ஐபிஎல் போட்டிகளில் ஐம்பது ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

எனினும் அதன் பின்னர் ஐபிஎல் சுற்றுப்போட்டிகளில் அவர் சோபிக்கவில்லை. அவரது சராசரி 27 என்ற அளவிலேயே காணப்படுகின்றது. இதன் காரணமாக அவர் தன்னிடமுள்ள திறமையை முற்றாக வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சாம்சன் இந்திய அணியில் இடம்பெறகூடிய நிலையும் காணப்பட்டது.இந்திய ஏ அணிக்காக விளையாடியுள்ளார் ஒரேயொரு ரி20 போட்டியிலும் அவர் விளையாடியுள்ளார்.

எனினும் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை முற்றாக பயன்படுத்தவில்லை.
அதேவேளை அவரது சகாக்கள் பலர் அவரை முந்திக்கொண்டு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்-

டில்லி அணியிலிருந்து விலகி தனது புதிய அணிக்காக விளையாட ஆரம்பித்துள்ள சஞ்சுசாம்சன் டில்லி அணிக்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் அதிரடியாக 37 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
அந்த இனிங்சில் அவரிடம் உள்ள பொறி தென்பட்டது அவர்அது அணைந்துவிடாமல் பாதுகாத்து வருகின்றார்.

ஞாயிற்றுக்கிழமை அவர் பெங்களுர் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் பெற்ற 92 ஓட்டங்கள் இந்த ஐபிஎல் தொடரின் பின்னர் அவர் இந்தியாவின் ரி 20 அணியில் இடம்பெறுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

சர்வதேச அளவில் அனுபவம் மிக்க வீரர்களாக உமேஸ் யாதவ் வோசிங்டன் சுந்தர் கிறிஸ்வோக்ஸ் ஆகியோரை சாம்சன் அடித்து ஆடினார்.10 சிக்சர்களை பெற்றார்.

அந்த இனிங்சிற்காக ஆட்டநாயகன் பெற்ற சாம்சன் நான் நல்லநிலையில் இருப்பதாக உணர்கின்றேன் இப்போதுதானே போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன என அவர் தெரிவித்தார்.
அவர் இந்திய அணியின் எதிர்காலம் நாங்கள் அவரிற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என தெரிவித்தார் ராஜஸ்தான் ரோயல்சின் தலைவர் ரகானே.

(Visited 52 times, 1 visits today)

Post Author: A Rajeevan