குவைத்தில் 40 வருடங்கள் பணிபுரிந்த இலங்கை பெண்ணின் அவலம்

குவைத்தில் நாற்பது வருடங்கள் பணிப்பெண்ணாக பணியாற்றிய பின்னர் வெறுங்கையுடன் இலங்கை திரும்பிய பெண்ணொருவரை அழைத்துச்செல்ல குடும்பத்தவர்கள் எவரும் வராததன் காரணமாக அவரை அதிகாரிகள் நலன்புரிநிலையத்தில் சேர்த்துள்ள பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

40 வருடங்கள் பணியாற்றிய இலங்கையை சேர்ந்த 72 வயது பெண்ணொருவரை அவரிடம் பணமோ அல்லது ஆவணங்களோ இல்லாத நிலையில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
அம்பலாங்கொடையை சேர்ந்த பெண்மணியே இவ்வாறான நிலையில் இலங்கை வந்துள்ளார்.

குவைத் தூதரக அதிகாரிகள் அந்த பெண்மணிக்கு நஸ்டஈடோ அல்லது ஊதியமோ கிடைப்பதை உறுதிசெய்யவில்லை என வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் இலங்கை வந்தடைந்த அந்த பெண்மணி தன்னை அழைத்துச்செல்வதற்கு எவரும் இல்லாத பரிதாப நிலையை எதிர்கொண்டுள்ளார்.

நாற்பது வருடங்கள் குவைத்தில் பணியாற்றிய பின்னர் தாயகம் திரும்பிய அவரை அழைத்துச்சசெல்ல குடும்பத்தவர்களோ உறவினர்களோ வரவில்லை இதன் காரணமாக அவர் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண்ணை அழைத்துச்செல்வதற்கு எவரும் வராததன் காரணமாக அவரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது குறித்து சிந்திக்கின்றோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

(Visited 99 times, 1 visits today)

Post Author: A Rajeevan