சுற்றுலாப்பயணிகள் தாக்கப்படுவதற்கு அரசியல் சக்திகளே காரணம்- ஜோன் அமரதுங்க குற்றச்சாட்டு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளை தாக்குவதை இனந்தெரியாத தரப்பினர் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கின்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆங்கில இணையத்தளமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மிரிசபகுதியில் வெளிநாட்டவர்கள் தாக்கப்பட்டது கூட திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிரிசவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பலர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைதுசெய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப்பயணிகள் தாக்கப்படுவதன் பின்னால் அரசியல் சக்திகள் உள்ளன மறைகரமொன்று உள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் இது குறித்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மிரிசவில் இடம்பெற்ற இரு சம்பவங்களும் திட்டமிடப்பட்ட வன்முறைகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 34 times, 1 visits today)

Post Author: A Rajeevan