கனடாவின் தொடர்கொலையாளியால் இலங்கை பிரஜை படுகொலை

கனடாவின் டொரன்டோவை சேர்ந்த தொடர்கொலையாளி புரூஸ் மக்ஆர்தர் இலங்கையை சேர்ந்த ஒருவரையும் கொலைசெய்துள்ளதை கனடா பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
இலங்கையிலிருந்து கனடாவிற்கு 2010 ம் ஆண்டு சென்ற கிருஸ்ண குமார் கனகரட்னம் என்ற நபரையே மக்ஆர்தர் படுகொலை செய்துள்ளார்.

கடந்த மாதம் நபர் ஒருவரின் படத்தை வெளியிட்ட பொலிஸார் அந்த நபர் குறித்த விபரங்களை கோரியிருந்தனர்.குறிப்பிட்ட நபர் மக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக கிருஸ்ணகுமார் கனகரட்ணம் என்ற நபரே அவர் என்பதையும் அவர் தொடர்கொலையாளியினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் உறுதிசெய்துள்ளனர்.

2015 ம் ஆண்டு செப்டம்பருக்கும் டிசம்பருக்கும் இடையில் இலங்கை பிரஜை கொலை செய்யப்பட்டிருக்கலாம் கொலை செய்யப்பட்ட நபரிற்கு 35 வயதிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மக்ஆர்தர் மீது மேலும் ஏழு நபர்களை கொலை செய்ததாக கனேடிய பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
இவர்களுடன் மிக்ஆர்தர் பாலியல் உறவினை வைத்திருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 55 times, 1 visits today)

Post Author: A Rajeevan