திருநங்கை என நிரூபிக்க சொல்லி இயக்குனர் செய்த காரியம்:வீடியோ

தெலுங்கு திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து ஸ்ரீ ரெட்டி குரல் கொடுத்தார். இதையடுத்து ஒவ்வொரு நடிகையாக முன்வந்து பேசத் துவங்கியுள்ளனர்.

ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகைகள், பெண் ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், என்.ஜி.ஓ.க்கள் கலந்து கொண்டனர்.

ஹைதராபாத் நிகழ்ச்சியில் ஸ்ரீ ரெட்டியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வந்த நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து தெரிவித்து கண்ணீர் சிந்தினார்கள்.

திருநங்கை பட வாய்ப்பு குறித்த விளம்பரத்தை டிவியில் பார்த்துவிட்டு ஆடிஷனுக்கு சென்றேன். நான் நிஜமாகவே திருநங்கை தானா என்று இயக்குனர் கேட்டார்.

அதை நிரூபிக்க என்னை ஆடையை அவிழ்த்து காண்பிக்க வைத்தார் என்று கூறி நடிகை சோனா ரத்தோட் கதறி அழுதார்.

(Visited 76 times, 1 visits today)

Post Author: metronews 2