தனது சொந்த மகனை தூக்கியெறிந்த தந்தை…!

 

தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடுகளை அகற்றுவதற்கு எதிராக போராடிய நபரொருவர் தன் சொந்த மகனை கூரையிலிருந்து தூக்கியெறிந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் தனது சொந்த மகனின் உயிரை கூட பொருட்படுத்தாது வீட்டின் கூரை ஓட்டில் இருந்து கீழே எறிந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

38 வயது நிரம்பிய குறித்த நபர் குழந்தையை கீழே எறிந்ததுடன் பொலிஸ் அதிகாரி பற்றிக் கொண்டமையால் குழந்தை உயிர் காப்பாற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை (13.04.2018) இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 63 times, 1 visits today)

Post Author: metronews 3