இரத்தத்தின் வாசனையை உணர்ந்தேன்- இரசாயன ஆயுத தாக்குதலில் சிக்குண்ட சிறுமி தெரிவிப்பு

சிரிய படையினரின் இரசாயன ஆயுததாக்குதலின் போது தான் எதிர்கொண்ட அவலத்தை சிரியாவை சேர்ந்த ஏழு வயது சிறுமியொருவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இரு வாரங்களிற்கு முன்னர் சிரியாவில் பொதுமக்கள் மீது இரசாயன ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டவேளை மசா என்ற அந்த சிறுமி ஏனைய குழந்தைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள படங்கள் வெளியாகி உலகத்தின் மனச்சாட்சியை துளைத்திருந்தன.

அதற்கு ஒரு வாரத்திற்கு பின்னர் அந்த சிறுமி அன்றைய தினம் என்ன இடம்பெற்றது என்பதை வர்ணித்துள்ளார்.

பிபிசியிடம் தனது அனுபவங்களை அந்த சிறுமி இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார்
டுமாவில் அன்று நாங்கள் வீட்டின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைகளில் பதுங்கியிருந்தோம்.

தீடிரென என அவர்கள் பீப்பாய்ஒன்றினை வீசினார்கள் அது வெடிக்கவில்லை ஆனால் அது விழுந்தவுடன் சத்தமொன்று மாத்திரம் வெளிவந்தது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் என்னை வேறு பகுதிக்கு தப்பி ஓடுமாறு தெரிவித்தனர் நான் அங்கிருந்து வேறு பகுதிக்கு செல்ல முயன்றேன் ஆனால் என்னால் முடியவில்லை மயங்கிவிழுந்தேன்.

அம்மா என்மகள் என் மகள் என அலறினார்.

 

எனது மாமா ஒடிவந்து என்னை தூக்கினார் ஈரத்துணியால் முகத்தை துடைத்தார்,அதன் பின்னர் என்னை மேலே தூக்கிக்கொண்டு போனார்,

அதன் பின்னர் மூன்று மருத்துவர்கள் வந்தனர் அவர்கள் என்னையும் எனது சகோதரியையும் வானிற்குள் கொண்டு சென்றனர்.

அவர்கள் அருகிலிருந்து மருத்துவசிகிச்சை நிலையத்திற்கு எங்களை கொண்டு சென்று எங்கள் மீது தண்ணீரை தெளித்தனர் பின்னர் அதன் பின்னர் ஊசி போட்டனர்.

நாங்கள் உறங்கப்போனோம் விமானங்கள் குண்டுவீசிக்கொண்டிருந்தன எங்களை சுற்றிலும் புகைமண்டலமாக காணப்பட்டது.

பின்னர் நாங்கள் மீண்டும் அந்த பதுங்குழிக்கு சென்றவேளை அந்த பகுதியில் காற்றை சுவாசிப்பதற்கு பதில் இரத்தத்தின் வாசனையை உணர்ந்தோம் என அந்த சிறுமி

தெரிவித்துள்ளார்.

(Visited 18 times, 1 visits today)

Post Author: A Rajeevan