பாக்கிஸ்தானின் முஸ்டாக் அகமட் இலங்கையின் புதிய சுழற்பந்து பயிற்றுவிப்பாளர்?

இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பாக்கிஸ்தானின் லெக்ஸ்பின்னர் முஸ்டாக் அகமட் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து பாக்கிஸ்தான் அணிகளி;ன் பந்துவீச்சு பயிற்றுவி;ப்பாளராக பணியாற்றியுள்ள முஸ்டாக் அகமட் இது குறித்த தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை முன்னாள் வீரர் ருவான் கல்பகே சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிகளில் பாரிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தற்போது அணியின் முகாமையாளராக உள்ள அசங்க குருசிங்க அணியின் உயர் செயற்பாட்டு முகாமையாளராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

(Visited 24 times, 1 visits today)

Post Author: A Rajeevan