இரவு நேரத்தில் ஒப்பனையில் ஈடுபடும் பெண்கள் கவனம்…!

பெண்கள் அவர்களுடைய முக அழகை பராமரிப்பதற்கு பல வகையான நடவடிக்கைளில் ஈடுபடுவார்கள். அதில் அழகு நிலையங்களுக்கு மிக பெரிய பங்கு உண்டு. அந்த வகையில், சிங்கப்பூர், சுகாதார அறிவியல் ஆணையம் 18 அழகு ஒப்பனைப் பொருட்களை மீட்டுக் கொண்டுள்ளது. அவற்றில், அறிவிக்கப்படாத சக்திவாய்ந்த மூலப்பொருட்கள் இருந்ததே அதற்குக் காரணம். அதோடு அதிக அளவிலான பாதரசமும் (bleach) அதில் அடங்குகின்றன.

சில கிரீம்களில் பாதரசம், அனுமதிக்கப்பட்ட அளவை விட 27,000 மடங்கு அதிகமாக இருந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது. மற்ற பொருட்களில் hydroquinone, tretinoin போன்ற சக்திவாய்ந்த மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் காரணமாக , அழகு ஒப்பனைப் பொருட்களில் பாதரசத்தின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. பாதரசம் சருமத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆணையம் எச்சரித்து உள்ளது.

மற்றும் , தடைசெய்யப்பட்டுள்ள ஒப்பனைப் பொருட்களின் விவரங்கள் இதோ:

-Balleza Skincare night cream
-Balleza Skincare treatment
-Brilliant Skin Essentials rejuvenating cream, rejuvenating facial toner exfoliant toner, whitening cream
-Brilliant Skin Essentials whitening facial toner
-Droplets of Nature rejuvenating cream lift and correct
-Droplets of Nature rejuvenating toner lift and correct
-Goree beauty cream with lycopene
-Karisma Cosmetic skincare day cream and night cream
-Karisma Cosmetic skincare treatment cream
-Professional Skin Care Formula by Dr Alvin rejuvenating cream and rejuvenating toner
-Skin Magical rejuvenating cream and facial toner No 1

-Speaks G Skin Essential brightening rejuvenating cream and rejuvenating toner

ஆகவே, இரவு நேர கிரீம்களை பயன்படுத்தும் அனைவரையும் உடனடியாக நிறுத்தும்படி அனைத்து நாடு பொதுமக்களையும் ஆணையம் எச்சரித்துள்ளது.

காரணம் தற்பொழுது அறிமுகமாகும் அனைத்து இரவு நேர கிரீம்களில் இப் பாதரசம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே இருக்கும் முக அழகை கைவிட்டு மேலும் அழகு சேர்க்கவேண்டும் என்று இவ்வாறான கிரீம்களை பயன்படுத்தி இருக்கும் அழகையும் கெடுத்துக்கொள்ளவேண்டாம்.

(Visited 74 times, 1 visits today)

Post Author: metronews 3