26 வயது பெண்ணை காதலிக்கும் 52 வயது நடிகர் : என்ன ஒரு ரொமாண்டிக் ஜோடி…!

அசரவைக்கும் படங்கள்!

தமிழில் அலெக்ஸ்பாண்டியன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகர் மிலிந்த் சோமன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் உள்ள நைட்கிளப் ஒன்றில் 26 வயது அங்கிதா என்பவரை சந்தித்தார்.

மகள் வயது உள்ள பெண்ணாக இருந்தாலும் பார்த்தவுடன் காதல் கொண்ட மிலிந்த், அவரிடம் தனது செல்போனை கொடுத்துவிட்டு வந்துள்ளார். மறுநாளே அங்கிதா, மிலிந்துக்கு போன் செய்ய பின்னர் இருவரும் நட்பாக பழகி தற்போது காதலித்து வருகின்றனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தனது வயதில் பாதி வயதே உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளவிருப்பதால் வரும் விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்த மிலிந்த், ‘மற்றவர்கள் எங்கள் காதல் குறித்து என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து எனக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்களுக்கு எங்களை பற்றியும் எங்கள் காதல் பற்றியும் தெரியாது’ என்று கூறியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அங்கிதா ஒரு விமான பணிப்பெண் என்பதும் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 166 times, 1 visits today)

Post Author: metronews 3