பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் வழக்கறிஞருக்கு பிரபல ஹாலிவுட் நடிகை பாராட்டு

பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது கத்துவா சிறுமியின் வழக்கறிஞர் தீபிகாவை , பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்பாராட்டியுள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக சக வழக்கறிஞர்கள் மற்றும் பார் கவுன்சில் செயல்பட்ட பொழுதும், தீபிகா சிங் ரஜாவத் எனும் பெண் வழக்கறிஞர் துணிச்சலாக சிறுமி சார்பாக நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் படி சுப்ரீம் கோர்ட் கூட உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கத்துவா சிறுமியின் வழக்கறிஞர் தீபிகாவை பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன். இவர் சிறுவர்கள் மத்தியில் பிரபலமான ஹாரி பாட்டர் தொடர் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் ஐநாவின் சார்பாக பெண்கள் நல்லெணத் தூதராகவும் இருந்து வருகிறார். அதன் சார்பாக இளம்பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தீபிகா பற்றிய கட்டுரை ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த கட்டுரையானது தீபிகாவின் தன்னம்பிக்கை மற்றும் தொழில் நேர்மை ஆகியவற்றைப் பாராட்டுவதாக அமைந்திருந்தது. கட்டுரையினைப் பகிர்ந்த எம்மா அதில் எல்லா சக்தியும் தீபிகாவுடையதே என்று குறிப்பிட்டு உள்ளார்.

(Visited 199 times, 1 visits today)

Post Author: metronews 2