இப்படியான ஆண்களை தான் விரும்புகிறார்களாம் பெண்கள்… இதுல நீங்க எப்படி ?

ஒவ்வொரு வருடமும் கடந்த ஆண்டிற்கான ஈர்ப்பான இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலை டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் 2017ம் ஆண்டிற்கான மிகவும் ஈர்ப்பான இந்திய ஆண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது டைம்ஸ் நிறுவனம்.

எப்போதும் போல இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் சிலர் ரேங்கில் கீழேயும், மேலயும் இடமாறி சென்றுள்ளனர். சில புதுவரவுகளும் உள்ளன.

இந்த வருடம் இந்த பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி ரன்வீர் முதலிடத்தையும், 20 இடங்கள் முன்னேறி பாகுபலி பிரபாஸ் இரண்டாம் இடத்தையும், ஒரு இடம் பின்தங்கி விராட் மூன்றாம் இடத்தையும் பிடித்தள்ளனர். இதோ! 2017ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 10 ஈர்ப்பான ஆண்கள்..

1 ரன்வீர் சிங்!

பத்மாவத் படத்தில் நிஜமாகவே ஒரு சூப்பர் வில்லன் வேடம் ஏற்று கலக்கி இருந்தார் ரன்வீர் சிங். தீபிகாவை காதலித்து வருகிறார். விராட் – அனுஷ்கா திருமணத்திற்கு பிறகு பாலிவுட் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் திருமணம் இவர்களுடையது தான். இவரது ரொமான்ஸ், குறும்புத்தனம், உடற்கட்டு, பலவித தோற்றம் போன்றவை பெண்களிடம் ஈர்ப்பு பெற்றுள்ளது.

 

 

 

பிரபாஸ்!

பாகுபலியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இவரது மார்கெட் மட்டுமல்ல, இவரை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கும் பெண்களின் கூட்டமும் பெரிதாகி உள்ளது. பாகுபலி மூலம் பிரபாஸ் இந்திய அளவில் பெரிய ஸ்டாராக உயர்ந்துள்ளார்.

இப்போதைக்கு இவர் சிங்கிள் தான். ஆனால், அடிக்கடி மீடியாக்களில் அனுஷ்காவுடன் காதல் என்று இவர் பெயர் அடிப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த சேதியும் வரவில்லை. இவரிடம் பெண்கள் பிடித்ததாக கூறியிருப்பது, இவரது பார்வை, புன்னகை மற்றும் பாகுபலி தோற்றம்.

 

 

 

 

 

#3 விராத் கோலி!

இந்திய அணியின் அனைத்து ஃபார்மெட்களிலும் விராத் தான் கேப்டனாக தலைமை தாங்கி வருகிறார்கள். கடந்த ஆண்டு காலண்டரில் அதிக ரன்கள் ஸ்கோர் செய்த வீரர் என்ற சாதனையும் செய்துள்ளார்.

தனது நீண்ட நாள் காதலி அனுஷ்கா ஷர்மாவை விராட் மனமுடித்துவிட்டார். இவரிடம் பெண்கள் விரும்புவதாக கூறுவது மைதானத்தில் இவரது ஆக்ரோஷம். இது அனைத்து ஆண்களிடமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். திருமணம் ஆனாலும் கூட இவர் மீதான ஈர்ப்பு பெண்கள் மத்தியில் குறையவில்லை.

ஹ்ரிதிக் ரோஷன்!

இந்த டாப் டென் பட்டியலில் இவர் நுழைந்த போது, இவருடன் போட்டியாக இருந்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள். ஆனால், பல வருடமாக தொடர்ந்து இந்திய பெண்கள் விரும்பும் ஆண்கள் பட்டியலில் டாப் டென் இடத்தை பிடித்து வருகிறார் ஹ்ரிதிக் ரோஷன்.

விவாகரத்து ஆயிருந்தாலும் கூட, தனது முன்னாள் மனைவியை அடிக்கடி சந்தித்து வருகிறார் ஹ்ரிதிக். இவர்கள் இருவரும் கூடிய விரைவில் மீண்டும் சேர்ந்து வாழப் போவதாக அறியப்படுகிறது. கிரேக்க கடவுள் போன்ற இவரது உடல் தோற்றம், பர்சனாலிட்டி போன்றவரை பெண்கள் ஈர்ப்புடையதாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்

சித்தார்த் மல்ஹோத்ரா!

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது. ஆலியா பட்டை காதலித்து வந்தார். ஆனால், இப்போது இவர்கள் பிரிந்துவிட்டனர். தற்போது ஜாக்லின் பெர்னாண்டஸ் எனும் நடிகையுடன் இவர் டேட்டிங் உறவில் இருப்பதாக கிசுகிசு பரவி வருகிறது. ஆன்-ஸ்க்ரீனில் சித்தார்த்தின் ஜென்டில்மேன் தோற்றம் தங்களுக்கு பிடித்திருக்கிறது என்று பெண்கள் கூறியுள்ளனர்.

 

(Visited 89 times, 1 visits today)

Post Author: A Rajeevan