மசாஜ்நிலையங்கள் என்ற போர்வையில் விபச்சாரம்- கொழும்பில் அதிகரிப்பு

ஆயுள்வேத மத்திய நிலையம் அல்லது ஸ்பா என்ற பெயர்களில் விபச்சாரத்தில் ஈடுபடுவது கொழும்பை அண்டிய பகுதிகளில் அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் இவ்வாறான விபச்சாரவிடுதிகளை இலக்குவைத்து பொலிஸார் பல சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பல மசாஜ் நிலையங்களில் விபச்சாரம் இடம்பெறுவதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.கொழும்பு கோட்டை பகுதியிலும் மருதானையிலும் அதிகளவு மசாஜ் நிலையங்கள் காணப்படுகின்றன.கொள்ளுப்பிட்டியில் 35 சட்டவிரோத மசாஜ் நிலையங்கள் காணப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள மசாஜ்நிலையமொன்றில் பல வயதையுடைய யுவதிகள் பெண்கள் பணிபுரிகின்றனர்.குறிப்பிட்ட மசாஜ்நிலையம் மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதுடன் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தங்களிற்கு தேவையான யுவதியை தெரிவு செய்வதற்கு அனுமதியளி;க்கின்றது.

சில மசாஜ்நிலையங்கள் வாடிக்கையாளர்களிற்கு இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்குகின்றன.மேலும் அங்கு செல்பவர்கள் தங்களிற்கு பிடித்தமான யுவதிகளை தெரிவு செய்ய முடியும்.

மசாஜ் நிலையங்கள் அறவிடும் கட்டணங்களிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
அனேக மசாஜ்நிலையங்கள் தாங்கள் தெரிவு செய்யும் பெண்ணுடன் குறிப்பிட்ட ஒரு சிறிய அறையில் தங்கியிருப்பதற்காக 3000 ரூபாயை அறவிடுகின்றன.

இங்கு பெண்புரியும் பெண்களிற்கு நாளாந்த ஊதியம் கிடைக்கின்றது இதனை தவிர வாடிக்கையாளர்கள் வழங்கும் டிப்ஸ்களையும் அவர்கள் பெறமுடியும்.

அனேக மசாஜ் நிலையங்கள் தங்கள் இடத்தை பொலிஸார் சோதனையிடுவதை தடுப்பதற்காக பொலிஸாரிற்கு குறிப்பிட்ட கட்டணத்தை வழங்குகின்றன.

இவ்வாறு அனேகமசாஜ் பார்லர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதால் உண்மையாகவே உடல்மசாஜ் தேவைப்படுபவர்களின் தேவை பூர்த்தி செய்யப்படாத நிலை நிலவுகின்றது.
இலங்கையில் உண்மையான மசாஜ்நிலையங்கள் இல்லை அனேகமானவை போலியான விபச்சார விடுதிகள் என்கிறார் நபர் ஒருவர்.

பெண்கள் தாங்கள் என்னசெய்கின்றோம் என்பதை அறிந்தே இங்கு வேலைவாய்ப்பிற்காக வருகின்றனர் இதன்காரணமாக எங்களை பிழை சொல்ல முடியாது என்கிறார் உரிமையாளர் ஒருவர்.
பொலிஸார் சோதனையிடும்போது எங்கள் முதலாளிகள் எங்களை கைவிட்டுவிடுகின்றனர் இதன் காரணமாக நாங்களே குற்றவாளிகளாகின்றோம் என்கிறார் பெண் ஒருவர்.

(Visited 272 times, 1 visits today)

Post Author: A Rajeevan