அவெஞ்சர்ஸ் படத்தில் நடிக்க இவர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அவென்ஜ்ர்ஸ் (இன்பினிட்டி வார்) வெளிவந்து இரண்டு வாரம் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் பல பில்லியின் டாலர்களைச் சம்பாதித்து விட்டது. இப்போதுவரை அதிகம் சம்பாதித்த படத்தின் பட்டியலில் இது 3 அல்லது 4 வது இடத்தில் தான் இருக்கும்.

ஆனால் இந்த பணம் அனைத்தும் தயாரிப்பு நிறுவனத்தின் கைகளுக்கு தான் சென்று இருக்கும், ஏன் என்றால் மார்வல் ஸ்டுடியோஸ் இடம் பணம் சம்பாதிக்கும் திறம் மிகவும் அதிகம். இந்தப் படத்தின் மொத்த லாபம் என்பது ஒரு தோராயமாகவே கூறப்படுகிறது.

உலகின் மிகப் பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ஆகையால் இதன் பட்ஜெட்டும் மிகப் பெரியது. இந்தப் படத்தின் இயக்குநர் கூறுகையில் படத்தின் மொத்த செலவில் 300-400 மில்லியன் டாலரைச் சம்பளமாக இதில் நடித்தவர்களுக்கு அளித்தோம் என்றுள்ளார். அவெஞ்சர்ஸ் (இன்பினிட்டி வார்) படத்தில் நடித்த முன்னணி கதாப்பாத்திரங்களின் சம்பள விபரம் பற்றி பார்ப்போம்.

கேப்டன் அமெரிக்கா – கிறிஸ் எவன்ஸ்

அவென்ஜ்ர்ஸ்-இன் தலைவர் ஆனால் சம்பளம் என்று வரும்போது இவருக்குத் தொண்டன் இடத்தில் தான் இருக்கிறார். இந்தப் படத்தில் நடித்தருக்கு இவருக்கு 8 மில்லியன் டாலர் சம்பளம் அழிக்கப் பட்டது இது இவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கேப்டன் அமெரிக்கா திரைப்படத்திற்கு அழிக்கப்பட்ட சம்பளத்தை விட மிகவும் அதிகம்

 

 

.

 

 

 

 

 

 

தோர் – கிறிஸ் ஹெம்ஸ்ஒர்த்

 

 

 

 

 

சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தோர்- ராக்நரோக், இது ஒரு வெற்றிப் படம். தோர் படத்துக்கு இவருக்கு 31 மில்லியன் டாலர் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் அவென்ஜ்ர்ஸ் படத்துக்கு 12 மில்லியன் டாலர் பெற்றுள்ளார்

பிளாக் பாந்தர்-சாட்விக் போஸ்மேன்

இவரின் முதல் அவெஞ்சர்ஸ் திரைப்படமான பிளாக் பாந்தர் மிகப் பெரிய வெற்றி, ஏறத்தாழ 1 பில்லியன் டாலரைத் தொட்டது இந்தப் படத்தின் வசூல். பிளாக் பாந்தர், சாட்விக் போஸ்மேன்-க்கு முதல் அவெஞ்சர்ஸ் படம் என்பதால் மில்லினிக்கும் குறைவான சம்பளம் தான் தரப்பட்டது ஆனால் பிளாக் பாந்தர் வெற்றியைத் தொடர்ந்து அவென்ஜ்ர்ஸ்-இல் நடித்தருக்கு 2-3 மில்லியன் டாலர் சம்பளம் தரப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கிறது.

 

தி ஹல்க் – மார்க் ராஃயாலோ


அவென்ஜ்ர்ஸ் படத்தில் இவர் தான் அனைத்தையும் அடித்து உடைபவர் அதனாலேயே என்னமோ இவர்க்குக் குறைந்த சம்பளம் தான். மற்றொரு முக்கிய அவெஞ்சர்ஸ்-இல் ஹல்க் கேரக்டர் உருவாக்கத் தான் அதிக செலவு செய்யப்பட்டுள்ளது ஆனால் அவரின் சம்பளமோ அந்த அளவுக்கு இல்லை. மார்க் ராஃயாலோ ஹல்க் வேடத்திற்குப் பெற்ற சம்பளம் 5-6 மில்லியன் டாலர்.

ஸ்கார்லெட் ஜான்சன்

 

அதிக சம்பளம் வாங்கும் பெண் அவெஞ்சர் இவர் தான். மற்ற இரு பெண் அவென்ஜ்ர்கள் உடன் ஒப்பிடும்போது ஸ்கார்லெட் ஜான்சனின் சக்தி இந்தப் படத்தில் மிக அதிகம். சக ஆண் அவென்ஜ்ர்களுடன் இணையாக போட்டிபோட்டு நடிக்கும் திறனை கொண்டதனால் இவர்க்கு 20 மில்லியன் டாலர் அளவுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது

 

 

(Visited 101 times, 4 visits today)

Post Author: A Rajeevan