சிறிசேனவின் தலைமை அதிகாரியை அம்பலப்படுத்தியவரிற்கு கொலைமிரட்டல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதானி ஐ கே மகநாம மற்றும் இலங்கை மரக்கூட்டுத்தாபன தலைவர் ஆகியோரிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய இந்திய வர்த்தகரிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இருவரும் இலஞ்சம் பெற்ற விடயத்தை அம்பலப்படுத்திய இந்தியர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
செவ்வாய்கிழமை காலை கொழும்பு 7 இல் உள்ள இந்திய வர்த்தகரின் வீட்டிற்கு சென்ற இருவர் அவரிடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

குறிப்பிட்ட கடிதத்தில் மரண அச்சுறுத்தல் காணப்பட்டதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இனந்தெரியாத நபர்கள் தனக்கு வழங்கிய கடிதத்தை இந்திய வர்த்தகர் பொலிஸாரிடம் கையளித்துள்ளார்.

|

இதேவேளை குறிப்பிட்ட வர்த்தகரை பாதுகாப்பதற்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்களை பாதுகாக்க எவரும் இல்லை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அவர்களை துன்புறுத்துகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 106 times, 1 visits today)

Post Author: A Rajeevan