வாழ்க்கையை ரசித்து வாழும் அமலா பால்

அமலா பால் வாழ்க்கையை  ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு துயர சம்பவம் நடந்தால் அதில் இருந்து வெளியே வருவது நம் கையில் தான் உள்ளது என்பார்கள். அதை அமலா பால் நன்றாக புரிந்து வைத்துள்ளார். திருமண வாழ்க்கை முடிந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை என்பது அமலாவுக்கு தெரிந்துள்ளது. வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் விஷயங்களை ஆர்வத்துடன் கற்று வருகிறார்.

உடை

அமலா பால் விவாகரத்திற்கு பிறகு மிகவும் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார் என்று அவரை சிலர் திட்டுகிறார்கள். என் வாழ்க்கை, என் விருப்பம் என்று இருக்கும் அமலா விமர்சனங்களை கண்டுகொள்வது இல்லை

தியானம்

உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் யோகா, தியானம் செய்கிறார். ஜிம்முக்கும் செல்கிறார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது என்பதை புரிந்து கொண்டுள்ளார்.

வேலை பார்க்கும் நேரத்தில் வேலை பார், ரிலாக்ஸ் செய்யும் நேரத்தில் ஜாலியாக இரு என்ற தாரக மந்திரத்தின்படி வாழ்கிறார். ஷூட்டிங் இல்லை என்றால் பெட்டியை எடுத்துக் கொண்டு எங்காவது சுற்றுலா சென்றுவிடுகிறார்

நிதானம்

தன்னை தேடி வரும் அனைத்து பட வாய்ப்புகளையும் அமலா பால் ஏற்பது இல்லை. படங்களை ஒப்புக் கொள்வதில் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படுகிறார். அவரை தேடி வரும் வாய்ப்புகளுக்கு குறைவே இல்லை.

 

 

 

 

 

கிசுகிசு

 

எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளார் அமலா. தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

(Visited 36 times, 1 visits today)

Post Author: A Rajeevan