பத்தொன்பதாம் திகதி ஹொலிவூட் நடிகையை கரம்பிடிக்கின்றார் ஹரி

இங்கிலாந்து அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் அமெரிக்க நடிகையை திருமணம் செய்யும் மே 19 ஆம் தேதி இங்கிலாந்தின் மீது அனைவரின் கண்களும் இருக்கும்.
கற்பனை நிறைந்த தேவதைக் கதையில் வரும் திருமணம் போல் இந்த திருமணம் ஹொலிவுட் முதல் ஹம்ஸ்ஃபையர் வரை அனைவரது கற்பனையையும் கிளறும் விதமாக அமைந்துள்ளது.

இங்கிலாந்து ராணியின் பேரனும் வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ் மற்றும் மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் மகனுமான இளவரசர் ஹரி ஹொலிவூட் நடிகை மெகன் மார்க்லேயை மணமுடிக்கிறார்.
.
ஹரி மார்க்லே இருவரும் தங்களுடைய பொதுவான நண்பர்கள் மூலம் 2016 ஆம் ஆண்டு சந்தித்தனர்.

இருவரும் இரவு விருந்தின் போது கோழி ஒன்றை வறுத்துக் கொண்டிருந்த போது இளவரசர் ஹரி தன் காதலை தெரிவித்தார்.

திருமண நாள் அன்று என்ன நடக்கும்?

இந்த திருமணம்  லண்டனுக்கு மேற்கே 21 மைல் (34 கி.மீ.) தொலைவில் உள்ள வின்ஸ்டர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில்  19ந்தேதி உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 ணிக்கு நடைபெறும்.

தேவாலய ஆராதனை நிறைவடைந்ததும் புதுமணத் தம்பதியினர்  குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் இங்கிலாந்து ராணியின் அரசுமுறை இல்லங்களில் ஒன்றான வின்ஸ்டர் கோட்டை அமைந்துள்ள நகரைச்சுற்றி வலம் வருவார்கள்.

தாங்கள் வலம் வருவதற்கு வழக்கமாக அரசு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மடக்கக்கூடிய முகட்டைக் கொண்ட சாரட் வண்டியினை புதுமண ஜோடி தேர்வு செய்துள்ளது.

கோட்டையில் உள்ள வரவேற்பு அரங்கமான செயின்ட் ஜார்ஜ் அரங்கில் இந்த ஊர்வலம் நிறைவடையும்  அங்கு சுமார் 600 விருந்தினர்களுக்கு மதிய உணவு விருந்தில் பங்கேற்க ராணி அழைப்பு விடுத்துள்ளார்.

அன்று மாலை புது மணத் தம்பதியினர் பிரமாதமாக ஒளியூட்டப்பட்ட ஃபிராக்மோர் மாளிகையில் தங்களுக்கு நெருக்கமான 200 நண்பர்களுக்கு விருந்து அளிப்பார்கள்.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.

2011 ஆம் ஆண்டு 24 மில்லியன் பிரிட்டன் மக்கள் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் திருமணத்தை தொலைக்காட்சியில் கண்டனர். பிரிட்டிஷ் வரலாற்றில் மிகவும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட 10 நிகழ்சிகளில் அதுவும் ஒன்று.

வில்லியமின் இளைய சகோதரனின் திருமணத்தையும் இதே போல் லட்சக்கணக்கானோர் கண்டு களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமண சடங்குகள் எப்படி இருக்கும்?

இங்கிலாந்து கிறிஸ்தவ தேவாலயங்களின் தலைவராக ராணி உள்ளார். இந்த தேவாலயங்கள் புரட்டஸ்டான்ட் கிறிஸ்தவ பிரிவின் அங்கிலிகன் சமயத்தைச் சேர்ந்தவை.

பேராயர் வெல்பி தான் இவர்கள் திருமணத்தையும் நடத்திவைப்பார். உறுதியேற்பு ஆராதனை மற்றும் விவிலியத்தில் இருந்து செய்தி வாசித்தல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெறும்.
.

மார்க்லேயின் திருமண உடை அலங்காரம் இந்த நேரத்தில் அரசு ரகசியமாகும்
அவர் என்ன வகை திருமண உடை அணிய தேர்வு செய்கிறார் என்பதை நீங்கள் திருமண நாளன்றுதான் பார்க்க முடியும்.

(Visited 31 times, 1 visits today)

Post Author: A Rajeevan