நடிகர் ரமேஷ் அரவிந்த் மகளா இது?: வைரலான புகைப்படம்

நடிகர் ரமேஷ் அரவிந்தின் மகளின் புகைப்படம் வைரலாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருபவர் ரமேஷ் அரவிந்த்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் நெருங்கிய நண்பர். கமலுடன் சேர்ந்து நடித்ததுடன் அவரை வைத்து உத்தம வில்லன் படத்தை இயக்கியவர். தற்போது அவர் குயீன் படத்தை கன்னடம் மற்றும் தமிழில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார். தமிழில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்

இந்நிலையில் நேற்று நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் ரமேஷ் அரவிந்த் வாக்களித்தார். அவரின் மகள் முதன்முதலாக வாக்களித்துள்ளார். மகளுடன் சேர்ந்து வாக்களித்த பிறகு எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ரமேஷ் அரவிந்த். ரமேஷ் அரவிந்துக்கு இவ்வளவு பெரிய மகளா என்று கோலிவுட் ரசிகர்கள் வியக்கிறார்கள்.

 

(Visited 23 times, 2 visits today)

Post Author: A Rajeevan