கரடியால் சிறுமிக்கு நேர்ந்த அவலம்

அமெரிக்காவின் கொலரடோவில் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமியை கரடி இழுத்துச் சென்றது.

கிராண்ட் ஜங்சனைச் சேர்ந்த கிம்பெர்லி சைர் ((kimberly cyr)) என்ற ஐந்து வயதுச் சிறுமி, வீட்டின் வெளியே நாய் குரைப்பதைக் கண்டு அங்கு சென்றாள்.

அப்போது திடீரென சிறுமி முன் தோன்றிய கரடி ஒன்று, அவரை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற பெற்றோர், கரடியை விரட்டியதால், சிறுமியை அங்கேயே விட்டு கரடி காட்டுக்குள் ஓடி மறைந்தது.

கரடி தாக்கியதில் காயம் அடைந்த கிம்பெர்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

(Visited 97 times, 1 visits today)

Post Author: metronews 2