இளவரசர் ஹரியின் வருங்கால மனைவியின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகின

இளவரசர் ஹரி அமெரிக்கா நடிகை மெகன் மேர்கிலே திருமணம் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் மார்கிலேயின் இளவயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டிஸ் அரண்மனையின் ஒரு உறுப்பினராக இன்னும் சில நாட்களில் இணையவுள்ள மார்கிலே தனது பதின்ம வயதில் உற்சாகமான நண்பர்களுடன் சேர்ந்து மகிழும் குணம்கொண்டவராக விளங்கியதை படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

மார்கிலே சாதாரண யுவதியாக வளர்ந்தார்,ஆனால் அவர் மிகப்பெரும் புகழ்பெறுவார்  என நாங்கள் எப்போதும் நம்பினோம் என அவரது சிறுவயது நண்பியொருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து யுவதிகளினதும் பெருங்கனவாக உள்ள விடயத்தை அவர் சாதிக்கப்போகின்றார் இளவரசர் ஹரியை மணம் முடிப்பதன் மூலம் இளவரசியாகப்போகின்றார் எனவும் அவரது நண்பி தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவின் தென்பகுதியில் உள்ள தொடர்மாடியொன்றில் வளர்ந்த அந்த சாதாரண சிறுமி பிரிட்டனின் அரச குடும்பத்தை ஒருவரை மணமுடிக்கப்போகின்றார் என்ற விடயம் நம்பமுடியாததாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையும் தாயும் பிரிந்த பின்னர் மார்கிலே லொஸ்ஏஞ்சல்சில் உள்ள இரு அறை வீட்டில் வசித்தார்.
ஆனால் அது சிறந்த இடமாகவே காணப்பட்டது என அவரது நண்பிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த தொடர்மாடியில் கலைஞர்கள் மற்றும் பின்னாளில் நடிகர்களாக மாறியவர்கள் வசித்தனர் என்கின்றார் அவரின் நண்பர் ஒருவர்.

அந்த தொடர்மாடி தாரளமான இடவசதி கொண்டதாக,அழகானதாக காணப்பட்டது கணவரை விவாகரத்து செய்தபோதிலும் அவரது தாய் அவரை சிறந்த முறையில் வளர்த்தார் எனவும் நண்பியொருவர் தெரிவிக்கின்றார்.


அனைத்து பதின்மவயதினர் போலவும் மார்கிலேயும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதை விரும்பியுள்ளார்.

கலிபோர்னியாவில் அவர் நண்பர்களுடன் நீச்சல் உடையில் காணப்படும் புகைப்படமொன்று வெளியாகியுள்ளது.
பாடசாலையில் அவர் காணப்படும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மார்கிலேயின் தாய் ஆபிரிக்க அமெரிக்க பின்னணியை கொண்டவர். தந்தை நெதர்லாந்து அயர்லாந்து பின்னணியை கொண்டவர்.

ஆனால் அவர் அனைத்து இனப்பின்னணியை சேர்ந்தவர்களுடனும் நண்பராகயிருந்தார் என அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
நண்பர்கள் அவரை ஆபிரிக்க அமெரிக்காராக கருதினார்கள் எனவும் நண்பியொருவர் தெரிவித்துள்ளார்.


மார்கிலே தனது தந்தையுடன் காணப்படும் புகைப்படமொன்றும் வெளியாகியுள்ளது.
அவரது பெற்றோர்கள் மிகச்சிறந்தவர்கள் தாய் அமைதியானவர் பணிவுள்ளவர் சமூக சேவைகளில் அக்கறையுள்ளவர் என மார்கிலேயின் நண்பியொருவர் தெரிவிக்கின்றார்.

(Visited 81 times, 1 visits today)

Post Author: A Rajeevan