போராடியும் தோற்ற ராஜஸ்தான்; கொல்கத்தா அபார வெற்றி….!

ஐபிஎல்லின் 48 ஆவது லீக் போட்டி நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களமிறங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிலிருந்து ராகுல் திரிபதி மற்றும் ஜொஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 4ஆவது ஓவர் முடிவில் 63 ஓட்டங்களுடன் இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் திரிபதி 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரஸ்ஸேலின் பந்து வீச்சில் வீழ்த்தப்பட்டார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் தலைவர் ரஹனே களத்திற்கு இறங்கினார். அவர் 4 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்த நிலையில் குல்திப் யாதவ்வின் பந்து வீச்சால் அவரும் ஆட்டமிழந்தார். 5ஆவது ஓவரிலிருந்தே ராஜஸ்தானுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்தது. தொடர் பயங்கர பந்து வீச்சால் ஒவ்வொருவரும் ஆட்டமிழந்து சென்ற நிலையில் 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 வெற்றி இலக்கை கொல்கத்தாவுக்கு நிர்ணயித்தது.

கொல்கத்தாவின் தொடர் வீரர்களாக சுனில் நரேன் கிறிஸ் லைன் களமிறங்கி நல்ல தொடக்கத்தை கொடுத்தது. பின்னர் பென் ஸ்டோக்ஸ்ஸின் பந்து வீச்சால் சுனில் நரேன் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய உத்தப்பா 4 ஓட்டங்களுடன் நடையை கட்டினார்.

அதன்பின் ரானா 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கொல்கத்தாவின் தலைவர் தினேஷ் கார்த்திக் களமிறங்க அவருடன் நின்று விளையாடினார் கிறிஸ் லைன். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த கிறிஸ் லைன் ஸ்டோக்ஸ்ஸின் பந்து வீச்சில் 45 ஓட்டங்களுடன் அவரும் கவிழ்ந்தார்.

பின்பு 16ஆவது ஓவரில் ஆண்ட்ரே ரசல் களமிறங்கினார்.  தினேஷ் மற்றும் ரசல் பொறுமையுடன் விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் 18 ஓவருக்கு 145 ஓட்டங்களை குவித்து அபார வெற்றியை கொடுத்தனர். இறுதியில் 6 அடித்து தினேஷ் 41 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். அதுவே வெற்றிக்கு வித்திட்டது.

(Visited 29 times, 1 visits today)

Post Author: metronews 3