நடிகைக்கு கத்தி முனையை காட்டி நடந்த கொடூரம்

இந்தியாவில் சென்னையில் குன்றத்தூர் என்ற பகுதியில் நடிகை ஒருவரை கத்தி முனையில் மூன்று நபர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த நடிகை ஒருவருக்கு குமார் என்பவர் போன் செய்து தான் ஒரு தயாரிப்பாளர் எனவும் தங்களிடம் படத்தை பற்றி பேச வேண்டும் எனவும் கூறி அவரை போரூருக்கு அழைத்துள்ளார்.

நடிகையும் போரூர் சென்றுள்ளார், பின்னர் அங்கு பைக்கில் இரண்டு நபர்கள் வந்து தங்களை முருகன் அனுப்பியதாகவும் உங்களை குன்றத்தூர் அழைத்து வர சொன்னதாகவும் கூறி அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சென்றதும் மூவரும் சேர்ந்து இவரை ஒரு வீட்டில் அடைத்து கத்தி முனையில் பலாத்காரம் செய்தது மட்டுமில்லாமல் வீடியோ எடுத்து உள்ளனர். இதனை வெளியில் சொன்னால் விடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

பின்னர் நடிகையிடம் இருந்த நகை மற்றும் 3000 ரூபா பணத்தை பறித்து கொண்டு ஒரு வாடகை வண்டியில் ஏற்றி அவரை அனுப்பி வைத்துள்ளனர். நேராக பொலிஸ் நிலையத்துக்கு சென்ற நடிகை நடந்தது குறித்து முறைப்பாடு அளிக்க பொலிஸார் வழக்கு பதிவு செய்து அந்த மூன்று நபரையும் தேடி வருகின்றனர்.

(Visited 161 times, 4 visits today)

Post Author: metronews 2