ரமழான் தலைப்பிறை தொடர்பில் வதந்திகளை நம்ப வேண்டாம்….!

ரமழான் தலைப்பிறை தொடர்பில் வெளியாகும் எந்த ஒரு உத்தியோகப்பூர்வமற்ற தகவல்களையும் நம்ப வேண்டாம் என பிறைக் குழுத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ஷமீது பஹ்ஜி தெரிவித்தார்.

நேற்று (16.05.2018) மாலை நடைபெற்ற பள்ளிவாயல் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டிலிருந்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.

தொலைபேசிகள், முகநூல் பக்கங்கள் ஊடாக வெளியாகும் எந்த பொய்யான செய்திகள், வதந்திகளும் பரப்பப்படலாம். மக்கள் அவற்றை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்தார். நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடிய உலமாக்கள் ஏகோபித்து இன்று (17.05.2018) நோன்பு இல்லை என்று உறுதி செய்தனர்.

இதன்படி நாளை (18.05.2018) வெள்ளிக்கிழமை ரமழான் முதலாவது நோன்பு ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் அறிவித்தார்.

(Visited 48 times, 1 visits today)

Post Author: metronews 3