பாடசாலை மாணவர்கள் செய்த வேலை தொடர்பாக பரபரப்பு நிலை….!

தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர்கள் இணைந்து இன்னொரு மாணவனை கிண்டலடித்துப் பேசியதால் கோபமடைந்த மாணவன் சக மாணவனை சராமாரியாகக் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்கான மாணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவன் சியம்பலாண்டுவ ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் மொனராகலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாடசாலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய மாணவனை சியம்பலாண்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சியபலாண்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 60 times, 1 visits today)

Post Author: metronews 3