நிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்!

அமெரிக்காவின்கன்சாஸ் பல்கலைகழகத்தில் சியர் லீடர் பயிற்சி பெற்று வந்த மாணவிகள் தங்கள் சீனியர்கள் செய்து வந்த கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

சியர் லீடர் தேர்வு என்று அழைத்து சென்று தங்களை வாஷிங் மெஷின் மற்றும் அட்டை பெட்டிக்குள் அடைத்து உதைத்தும், ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி அசிங்கப் படுத்தியதாகவும் மாணவியர் புகார் அளித்தது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற புகாரில் கன்சாஸ்  சிக்குவது இதுவே முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் கன்சாஸ் சியர் லீடர்கள் தேசிய அளவிலான சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இணையதள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் பாதிக்கப்பட்ட கன்சாஸ் பல்கலைகழக மாணவி ஒருவர் இந்த அதிர்ச்சி தாளாமல் பல்கலைகழகத்தில் இருந்து விலகியதாக கூறியுள்ளார்.

கன்சாஸ் பல்கலைகழகமும் இதுக்குறித்த விசாரணையை துவக்கியுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. சியர் லீடர் பயிற்சியில் தான் ராகிங் என்ற பெயரில் பல கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர் மாணவியர். சியர் லீடர் அணியில் இருந்து இரண்டு பெண்கள் (பெயர் வெளியிட மறுப்பு தெரிவித்து) பயிற்சியின் துவக்கத்தின் போதே ஆறு  சிரேஸ்டஉறுப்பினர்கள் தங்களை துன்புறுத்தினார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

கண்களை கட்டி!

கன்சாஸ் பல்கலைகழகத்தில் சியர் லீடர் பயிற்சிக்கு வந்த மாணவியரை, பழைய சியர் லீடர்கள் கண்களை கட்டி ஒருவர் பின் ஒருவராக காரில் ஏற்றி எங்கோ அழைத்து சென்றனர். பிறகு எங்களை ஒரு தனிமையான வீட்டிற்குள் அழைத்து சென்றனர். கடைசி வரை எங்கள் கண் கட்டை அவர்கள் அவிழ்த்து விடவே இல்லை என பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் புகார் கூறியுள்ளனர்.

நிர்வாணப்படுத்தி கொடுமை!

அழைத்து செல்லப்பட்ட எங்களை வாஷிங் மெஷின் மற்றும் அட்டை பெட்டிக்குள் அடித்து வெளிப்புறத்தில் இருந்து உதைத்து துன்புறுத்தினார்கள். பிறகு, எங்களை ஒரு அறையில் உட்கார வைத்து கேள்விகள் கேட்க துவங்கினார்கள்.

ஒவ்வொரு முறை தவறான பதில் கூறும் போதெல்லாம் ஒவ்வொரு ஆடையாக கழற்ற வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இறுதியாக எங்களை நிர்வாணப்படுத்தினர்.

அப்போது எங்களை ஒரு தனி அறையில் அடைத்து வைத்திருந்தனர். இடையே நான் மற்றும் என்னருகில் இருந்து பெண்சிரேஸ்ட  சியர் லீடர்களின் பேச்சை கேட்காமல் கண் கட்டை அவிழ்த்து பார்த்த போது தான். அதே அறையில் வேறு சில ஆண்  சிரேஸ்டசியர் லீடர்இருப்பது அறிய வந்தது. மேலும், அவர்கள் எங்களை நீண்ட நேரம் நிர்வாண நிலையில் பார்த்து வந்ததை அறிந்து அதிர்ச்சியுற்றோம் என பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.

தடகள துறை!

சியர் லீடர் பயிற்சியில் இருந்து விலகிய பெண்கள், கன்சாஸ் பல்கலைகழகத்தில் இருந்து நாங்கள் விலகுவதற்கு காரணம். இங்கே இருக்கும் தடகள துறை அழகான பெண்களை தான் சியர் லீடராக ஊடகத்தின் முன் காட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறது, என்று கூறியுள்ளனர்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2016ல் கன்சாஸ் சியர் லீடர் அணி தேசிய அளவிலான சர்ச்சையில் சிக்கியது. அந்த சர்ச்சையில் சிக்கிய மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் சியர் லீடர்கள் தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிர்ச்சி!

சியர் லீடர் என்பது கவர்ச்சி அல்ல, அதுவும் ஒரு கலை வடிவம் மற்றும் விளையாட்டு தான் இந்த துறை மீது மேற்கத்திய மாணவ, மாணவியர் இடையே அதிக ஈடுபாடு காணப்படுகிறது, இதற்கான பயிற்சி வகுப்புகளை நிறைய பல்கலைகழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அளித்து வருகின்றன. இப்படியான சூழலில் மாணவிகள் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்திய நிகழ்வானது பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

(Visited 381 times, 1 visits today)

Post Author: A Rajeevan