ஹரியின் வருங்கால மனைவி குறித்து அவரின் ஆசிரியை என்ன சொல்கின்றார்?

மேகன் மார்க்கிலேயின் ஆசிரியை தனது மாணவி பிரிட்டிஸ் இளவரசரை மணமுடிக்கப்போகின்றார் என்பதை கேள்விப்பட்ட வேளை அவரின் மனதில் ஓரேயொரு எண்ணமே தோன்றியது.
பிரிட்டிஸ் இளவரசர் ஹரி அதிஸ்டசாலி என்பதே எனது மனதில் தோன்றிய முதல் எண்ணம் என்கின்றார் மார்கிலேயிற்கு கற்பித்த ஆசிரியை மரியா பொலியா.
மார்கிலேயிற்கு கற்பித்து பல வருடங்கள் கடந்து விட்ட போதிலும் அவர் எனது மனதில் இன்னமும் ஆழமாக பதிந்துள்ளார் அதன் காரணமாகவே பிரிட்டிஸ் அரச குடும்பத்தினர் அதிஸ்டசாலிகள் என கருதுகின்றேன் என அவர் குறி;ப்பிடுகின்றார்.

மேகனை எனக்கு நன்கு தெரியும்,அவர் தனித்துவமான பெண்,ஆழமும்,புத்திசாலித்தனமும், அவதானிப்பும் மிக்கவர் என ஆசிரியை மரியா குறிப்பிடுகின்றார்.
அதேவேளை ஹரிக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை துணையாக மார்க்கிலே விளங்குவார் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
லொஸ் ஏஞ்சல்சில் உள்ள பெண்களிற்கான கத்தோலி;க்க பாடசாலையிலிருந்து மார்க்கிலே வெளியேறி பல வருடங்களாகி விட்டன.
ஆனாலும் அவரின் நினைவுகள் ஆசிரியைகளின் மனதில் அழியாமல் உள்ளன.
மார்கிலே ஆழமான கருணையும் இரக்கமும் கொண்டவர் வயதிற்கு மீறிய மனமுதிர்ச்சி உள்ளவர் என அவரின் ஆசிரியைகள் பலர் தெரிவிக்கின்றனர்.
அவர் எப்போதும் மகிழ்ச்சியானவராக காணப்படுவார் கேள்விகளிற்கு பதில் அளிப்பதற்காக முதலில் கையை உயர்த்துவது அவரே எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹரியின் வருங்கால மனைவியிடம் காணப்பட்ட விசேட அம்சம் குறித்து மரியா பொலியா சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் வழமைக்கு மாறான இரக்ககுணம் கொண்டவர் மிகச்சிறிய வயதிலேயே அவர் அதனை வளர்த்துக்கொண்டார் என மரியா குறிப்பிடுகின்றார்.
இதன் காரணமாக மார்க்கிலே பெண்களிற்காகவும், தனது ஆபிரிக்க ஆசிய சமூகத்திற்காகவும், குரல்கொடுப்பவராக மாறிய வேளை நான் ஆச்சரியமடையவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

(Visited 43 times, 1 visits today)

Post Author: A Rajeevan