போதைமாத்திரைகளுடன் மாலைதீவு பிரஜைகள் கைது

எக்டசி என்ற போதைமாத்திரைகளை வைத்திருந்த மாலைதீவு பிரஜைகள் இருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
தெகிவளையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
களுபோவில தெகிவளையில் இவர்கள் தங்கியிருந்த தொடர்மாடியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போதே இவர்களிடமிருந்து 1925 எக்டசி போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 10 மி;ல்லியன் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் குறிப்பிட்ட வகை போதைமாத்திரைகள் இவ்வளவு பெருந்தொகையில் மீட்கப்பட்டமை இதுவே முதல்தடவை என விசேட அதிரடிப்படையினர் தெரிவி;த்துள்ளனர்.
மாலைதீவை சேர்ந்த இருவர் நெதர்லாந்திலிருந்து பார்சல் சேவை மூலம் இந்த போதைமாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளனர்.


மாலைதீவு பிரஜைகள் அவற்றை விற்பனை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்தே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சந்தேகநபர்கள் இலங்கையில் போதைமாத்திரைகளை வி;ற்பதுடன் இங்கிருந்து வேறு நாடுகளிற்கு அவற்றை அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததும் விசாரைணைகளின் போது தெரியவந்துள்ளது.

(Visited 48 times, 1 visits today)

Post Author: A Rajeevan